மக்கள் விடுதலை முன்னணிக்கு ஒரு கோடி ரூபா இழப்பீட்டுத் தொகையை செலுத்துமாறு நீதிமன்றம் இன்று பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு உத்தரவிட்டுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார செயலாளர் ரில்வின் சில்வாவினால் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் பொது செயலாளராக விமல் வீரவன்ச மக்கள் விடுதலை முன்னணியில் அங்கம் வகித்த போது தாம் நிறைவேற்றுக்குழுவில் முன்வைத்த கருத்துக்கள் அடங்கிய  புத்தகத்தை வெளியிட்டமைக்கு எதிராக நீதிமன்றில் வழக்கொன்றை ரில்வின் சில்வா தாக்கல் செய்துள்ளார். 

புலமைச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக அடையாளங்காணப்பட்ட விமல் வீரவன்ச, மக்கள் விடுதலை முன்னணயின் பிரச்சார செயலாளர் ரில்வின் சில்வாவிற்கு 10 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்கவேண்டும் என நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கொழும்பு வணிக மேல்நீதிமன்ற நீதிபதி ருவன் பெர்னாண்டோவினால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விமல் வீரவன்ச அவரது பெயரில் வெளியிட்ட நூல் ஒன்றில் உள்ளடக்கப்பட்டுள்ள விபரங்கள் அனைத்தும் அவர் மக்கள் விடுதலை முன்னணியில் அங்கம் வகித்த போது தாம் நிறைவேற்றுக்குழுவில் முன்வைத்த கருத்துக்கள் என தெரிவித்தே ரில்வின் சில்வா விமலுக்கு எதிரான வழக்கை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.