முன்னாள் கனவு கன்னி ஜெயப்பிரதாவின் மகன் சித்து, ஹன்சிகா இணைந்து நடிக்கும் படம் 'உயிரே உயிரே'. தெலுங்கில் வெளியான 'இஷக்' படத்தின் ரீமேக் இது. விஷால் நடித்த 'சத்யம்' படத்தை இயக்கிய ராஜசேகர் இயக்கி உள்ளார்.

கதைப்படி சித்துவும், ஹன்சிகாவும் மும்பையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வருகிறார்கள். அறிமுகம் இல்லாத அவர்கள் அருகருகே அமர்ந்து வருகிறார்கள். சென்னையில் கனமழை பெய்ததால் தரையிறங்க முடியாத விமானம் கோவாவில் தரையிறங்குகிறது. அந்த சின்ன இடைவெளியில் இருவருக்கும் காதல் பூக்கிறது. மீண்டும் சென்னையில் வந்து அவர்கள் இறகும்போது காதலர்களாகி விடுகிறார்கள். ஆனால், அவர்கள் காதலுக்கு ஒரு பிரச்சினை வருகிறது. அந்த பிரச்சினையிலிருந்து மீண்டு எப்படி இணைகிறார்கள் என்பதுதான் படத்தின் கதையாம்.

கதைப்படி சந்தோஷம் வந்தாலோ, துக்கம் வந்தாலோ ஹன்சிகா சித்துவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து விடுவாராம். இப்படி 100 முத்தக்காட்சி எடுத்தார்களாம், படத்தில் 50 காட்சியாவது வருமாம். காதல் பண்ற எல்லோரும் இருவீட்டார் சம்மதத்துடன் தான் கல்யாணம் பண்ணிக்கணும் என்கிற 'மேசேஜ்' சொல்லும் இப்படம் அடுத்த வாரம் வெளிவரவுள்ளது.