இந்­தியா மற்றும் சுற்­றுலா தென் ஆபி­ரிக்க அணி­க­ளுக்­கி­டை­யி­லான மூன்­றா­வது டெஸ்ட் போட்டி இன்­றை­ய­தினம் நாக்­பூரில் ஆரம்­ப­மா­கின்­றது.

இந்­தி­யா­வுக்கு சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்­டுள்ள தென்­னா­பி­ரிக்க அணி நான்கு போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்­கேற்று வரு­கின்­றது. இந்­நி­லையில் மொஹா­லியில் நடை­பெற்ற முதல் டெஸ்டில் இந்­தியா 108 ஓட்­டங்­களால் வெற்றி பெற்­றது. பெங்­க­ளூரில் நடை­பெற்ற 2 ஆவது டெஸ்ட் மழையின் பாதிப்பால் வெற்­றி ­தோல்­வி­யின்றி நிறை­வ­டைந்­தது.

இந்­நி­லை­யி­லேயே மூன்­றா­வது போட்டி இன்றைய தினம் ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

இந்­தப்­போட்­டியில் வெற்றி பெறு­வ­தற்­கான இரு அணி வீரர்­களும் தீவிர பயிற்­சியில் ஈடு­பட்டு வரு­கி­றார்கள். மொகாலி டெஸ்டை போல இந்த டெஸ்­டிலும் இந்­தியா வெற்றி பெற்று தொடரை கைப்­பற்­றுமா? அல்­லது தென் ஆபி­ரிக்கா பதி­ல­டி­வ­ழங்­குமா? என்ற எதிர்­பார்ப்பு எழுந்­துள்­ளது.

நாக்பூர் ஆடு­களம் சுழற்­பந்து வீச்­சுக்கு சாத­க­மான அமையும் என கணிப்­பாளர் கள் குறிப்பி­டுகின் றார்கள். இந்­திய அணி சார்­பாக ரவிச்­சந்­திரன் அஷ்வின், ரவீந்­திர ஜடேஜா ஆகி­யோரின் ஆதிக்கம் அதி­க­மாக காணப்­ப­டு­மெ­னவும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. இந்­திய துடுப்­பாட்­டத்தில், முர­ளி­விஜய், புஜாரா அணித்­த­லைவர் கோஹ்லி உள்­ளிட்டோர் பிர­கா­சிப்­பார்கள் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. வேகப்­பந்து வீச்சாளர்களில் இஷாந்த்­சர்மா, வருண் ஆரோன் அணிக்குள் உள்­வாங்­கப்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புக்கள் உள்­ள­தா­கவும் ஸ்டூவர்ட் பின்னி நீக்­கப்­பட்டால் அமித் மிஷ்ரா இடம் பெறு­வா­ரெ­னவும் உமேஷ் யாத­வுக்கு வாய்ப்­புக்கள் குறை­வா­கவே உள்­ள­தா­கவும் இந்­திய கிரிக்கெட் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

அதே­வேளை தென்­ஆ­பி­ரிக்கா 2010ஆம் ஆண்டு இதே­மை­தா­னத்தில் இந்­தி­யாவை வெற்­றி­கொண்­டி­ருந்­தது. இந்த நம்­பிக்­கை­யு­டனும் அணித்­த­லைவர் ஹசிம் அம்லா, டுபெ­ளிசிஸ், டுமினி, எல்கர் , எ.பிடி.வில்­லியர்ஸ் போன்ற துடுப்­பாட்­ட­வீ­ரர்­களை நம்­பி­யுமே அவ்­வணி கள­மி­றங்­கு­கின்­றது. உபா­தைக்­குள்­ளான நிலையில் 2ஆவது டெஸ்டில் இடம் பெறாத வேகப்­பந்து வீச்­சாளர் டேல் ஸ்டெய்ன் இந்த டெஸ்­டிலும் விளை­யா­டு­வாரா என்­பது உறு­தி­யில்லை. இம்ரான் தாஹிர், ஹார்மர் ஆகியோர் சுழற்­பந்தில் அதிர்ச்­சி­ய­ளிக்­க­லா­மென எதிர்­ப­ார்க்­கப்­ப­டு­கின்­றது.


இந்­தியா மற்றும் தென் ஆபிரிக்க அணிகள் இதுவரையில் 31 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளன. அவற்றில் இந்தியா 8 டெஸ்ட்களிலும், தென்ஆபிரிக்கா 13 டெஸ்ட்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 10 டெஸ்ட் போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.