அம்மாவாகும் சமந்தா...?

Published By: Digital Desk 4

10 Jan, 2019 | 08:55 PM
image

திருமணமாகி இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் நடிகை சமந்தா கர்ப்பமாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

‘பாணா காத்தாடி’ என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை சமந்தா. நான் ஈ, அஞ்சான்,கத்தி, தெறி,  24, மெர்சல்,  இரும்பு திரை, சீமராஜா என பல வெற்றிப்படங்களில் நடித்திருக்கிறார் சமந்தா. இவருக்கும் தெலுங்கின் முன்னணி நடிகரான நாக சைதன்யாவிற்கும் கடந்த 2017ஆம் ஆண்டில் பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. 

நாகசைதன்யாவின் தந்தையான தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா,திருமணமான பிறகும் சமந்தாவின் நடிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கணவரான நாக சைதன்யாவின்ஆதரவும் இருந்ததால் திருமணத்திற்கு பிறகும் சமந்தா திரைப்படங்களில் தொடர்ந்து நடித்துவந்தார்.

திருமணத்திற்கு பிறகு கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படமான ‘யூ டேர்ன்’ என்ற படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக்கில் நடித்தார். அந்த படமும் வெற்றிப் பெற்றது.

இந்நிலையில் அவர் படபிடிப்பில் இருந்தாலும் இணையதள பயன்பாட்டில் ஆர்வம் காட்டுபவர். அதனால் அவர் அண்மையில் புகைப்படம் ஒன்றை பதிவேற்றியிருந்தார். அந்த புகைப்படத்தை பார்வையிட்ட அவரது ரசிகர் ஒருவர், ‘நீங்கள்.அம்மாவாக போகிறீர்களா..?’ என கேட்க, அதற்கு நேரடியாக பதிலளிக்காமல் அமைதி காத்திருக்கிறார் சமந்தா.

இதன் மூலம் அவர் விரைவில் தாயாக போகிறார் என்ற செய்தி வெளியானது. இதனை மறுக்க வேண்டிய சமந்தா இதுவரை மறுப்புதெரிவிக்கவில்லை. திருமணமாகி இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சமந்தா தாயாக போகிறார் என்கிறார்கள் திரையுலகினர். நடிகை சமந்தா தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் சூப்பர் டீலக்ஸ் என்ற படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறாரமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37