இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணத்தை சேர்ந்த 300 மீனவர்களுக்கு 4.5 கோடி ரூபா மதிப்பிலான 150 படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை இந்தியா வழங்க திட்டமிட்டுள்ளது.

மேலும், இலங்கை நீர்வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் ஆலோசனையுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்கான ஒப்பந்தம், இலங்கைக்கான இந்தியத் தூதர் ஒய்.கே.சின்ஹா மற்றும் இலங்கை மீன் பண்ணைகள், நீர்வள மேம்பாட்டுத் துறையின் செயலர் எம்.எம்.ஆர்., இடையே கையெழுத்தானதாகவும் இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.