தலையில் விழுந்த கொங்கிரீட் தூண்: மாணவன் பலி!

Published By: Daya

10 Jan, 2019 | 04:22 PM
image

அநுராதபுரம் - பலாகல பிரதேசத்தில் புதுகென மாகா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விளையாட்டு கட்டடத்தின் தூண் மாணவரொருவரின் தலையில் விழுந்த நிலையில், குறித்த மாணவன் உயிரிழந்துள்ளதாக கல்கிரியாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

புதுகேஹிந்த பிரதேசத்தை சேர்ந்த பசிது கிரஜான் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

குறித்த மாணவன் இம்முறை க.பொ.ச.தாரண பரீட்சையில் தோன்றவுள்ள நிலையில் பாடசாலையில் விளையாட்டில் திறமையான மாணவன் என பெற்றோர் தெரிவித்துள்ளனர். 

பாடசாலை நேரங்களுக்கு பிறகு கூடை பந்து மற்றும் கால்பந்து விளையாட்டுக்கான  பிரேத்தியேக பயிற்சியை பெற்றுக்கொள்வதற்காக பாடசாலை விளையாட்டு மைதானத்தில் குறித்த மாணவன் நின்றபோது அதன் அருகில் இருந்த கொங்கிரீட் தூண் சாய்ந்து விழுந்ததில் குறித்த மாணவன் உயரிழந்துள்ளதாக கல்கிரியாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

காயங்களுக்குள்ளான மாணவன் ஆபத்தான நிலையில் கலேவெ பிரதேச வைத்தியசாலையில் கொண்டு செல்லும் போதே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. 

இந்த ஆண்டு முதலாவது வகுப்பிற்காக பிள்ளைகளை சேர்த்து கொள்வதற்காக பணத்தை சேகரித்தமையால் அதிபர் குறித்த மாணவனை பார்க்க வரவில்லை என பெற்றோர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். 

குறித்த பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்டிருந்த ஏனைய தூண்களை பெற்றோர்கள் அப்புறப்படுத்திய நிலையில்  குறித்த பாடசாலைக்கு ஊடகவியலாளர்கள் வந்தபோது விளையாட்டு கட்டத்திற்காக அமைக்கப்பட்டிருந்த தூண்கள் உறுதியற்ற நிலையில் உள்ளதை அறிந்து குறித்த விடயம் தொடர்பாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.  

வடக்கு மாகாண ஆளுநரின் புதிய ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, குறித்த மரணத்தின் அறிக்கை சம்பந்தமான விடயங்களை  விரைவில் முன்னெடுக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31