ரயில் ஆசனப் பதிவு செய்வதில் சிக்கல்

Published By: Robert

03 Apr, 2016 | 10:17 AM
image

தலைமன்னார் கொழும்பு ரயில் சேவையில் மன்னார் பகுதி பயணிகள் ஆசன பதிவு செய்வதில் மிக சிரமத்தை எதிர்நோக்குவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

நாட்டின் யுத்த சூழ்நிலைக்குப்பின் தலைமன்னார் கொழும்பு ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியாகிய நிலையில் இவ் சேவை தொடர்ந்து இடம்பெற்று வருவதையிட்டு இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கும் இவ்வேளையில் ஒரு சில குறைபாடுகளும் இருப்பதாக சுட்டிக்காட்டுகின்றனர்

அதாவது தலைமன்னார் கொழும்பு ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டபின் தற்பொழுது அதிகமான பயணிகள் ரயிலில் பிரயாணம் செய்வதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

ஆனால் இவ் பயணிகள் இப்பகுதியிலிருந்து கொழும்பு செல்வதற்கு ரயிலில் ஆசனம் பதிவு செய்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

அதாவது மன்னார் மாவட்டத்திலிருந்து கொழும்புக்கோ அல்லது அதற்கு இடைப்பட்ட இடங்களுக்கோ ரயிலில் முன்கூட்டி ஆசன பதிவு செய்து பிரயாணத்தை தொடரவேண்டுமானால் தலைமன்னார் துறை அல்லது மதவாச்சி ரயில்வே நிலையத்தில்தான் ஆசன பதிவு மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மன்னார் மாவட்டத்ததை பொறுத்தமட்டில் முருங்கன் மன்னார் பேசாலை ஆகிய பிரதான பகுதிகளிலிருந்து தலைமன்னாருக்கோ அல்லது மதவாச்சிக்கோ சென்று ரயில் ஆசன பதிவு செய்வது முடியாத காரியமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது

அதுவும் அரச ஊழியர்கள் தங்கள் பகுதிகளிலிருந்து வேலை நாட்களில் ஆசன பதிவை பெறமுடியாது இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் தலைமன்னார் துறையில் காலை 8 மணிக்கும் மாலை 5 மணிக்கு இடையில் ஆசன பதிவை மேற்கொள்ள முடியாது பிரயாணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆகவே மன்னார் மாவட்டத்தில் பிரதானமாக விளங்கும் ரயில்வே நிலையங்களான தலைமன்னார் துறையுடன் பேசாலை, மன்னார், முருங்கன் ஆகிய ரயில்வே நிலையங்களிலும் பயணிகளின் நலன்கருதி ஆசன பதிவை மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதி பிரயாணிகளால் வேண்டுகோள் விடப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் மன்னார் ரயில்வே நிலையத்தில் ஆசன பதிவு இடம்பெற்றதாகவும் தற்பொழுது அவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் புகார்கள் தெரிவிக்கப்படுகிறது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54