சிகரட் விற்பனை வர்த்தகர்களுக்கு தண்டப் பணம்

Published By: Robert

03 Apr, 2016 | 10:01 AM
image

மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் இன்று வரை மேற்கொளளப்பட்ட நடவடிக்கையின்போது 159 சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் மூன்றரை இலட்சம் ரூபா அபராதமும் பெறப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்களத்தின் மாவட்ட பொறுப்பதிகாரி எஸ்.தங்கராஜா தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுவரித்திணைக்களத்தினால் தொடர்ச்சியான நடவடிக்கைககள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் இன்றுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின்போது 159பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.இவற்றில் 143 முறைப்படுகளுக்கு நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் 143 வழக்குகளுக்கும் மூன்றரை இலட்சம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டது.மேலும் 15 வழக்குகள் நீதிமன்றில் நிலுவையில் உள்ளன.

கசிப்பு உற்பத்தி,சட்ட விரோதமான வெளிநாட்டு மதுபானங்கள் விற்பனை,சட்ட விரோத மதுபான விற்பனை,சட்ட விரோதமாக சிறுவர்களுக்கு புகையிலைப்பொருட்கள் விற்பனை செய்தல் உட்பட பல்வேறுபட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன எனவும் அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44