குரே, நிலுக்கா நியமனங்களிற்கு ஐ.தே.க. எதிர்ப்பு

Published By: Rajeeban

10 Jan, 2019 | 11:43 AM
image

முன்னாள் ஆளுநர்களான ரெஜினோல்ட் குரே,நிலுக்கா ஏக்கநாயக்காவிற்கு அரசகூட்டுத்தாபனங்களின்; தலைவர் பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளமைக்கு ஐக்கியதேசிய கட்சி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. 

முன்னாள் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் அதிகாரசபையின் தலைவராக சிறிசேன நியமித்துள்ளார்

முன்னாள் சப்ரஹமுவ மாகாண ஆளுநரான நிலுக்கா ஏக்கநாயக்கவை அரசமரக்கூட்டுத்தாபனத்தின் தலைவராக சிறிசேன நியமித்துள்ளார்.

 ஜனாதிபதி சமீபத்தில்  அரச கூட்டுத்தாபனங்களின் தலைவர்களாக நியமிக்கப்படுபவர்கள் பட்டப்படிப்பை பூர்த்தி செய்திருக்கவேண்டும் என அறிவுறுத்தல் விடுத்திருந்ததை சுட்டிக்காட்டியுள்ள  ஐதேக வட்டாரங்கள் இரு ஆளுநர்களும் அந்த தகுதியை கொண்டிருக்கவில்லை என தெரிவித்துள்ளன

சமீபத்தில் அனைத்து கூட்டுத்தாபனங்களினதும் தலைவர்களின்  தகமை தொடர்பில் ஆராய்வதற்காக தனது செயலாளர் தலைமையில் குழுவொன்றை நியமித்திருந்த ஜனாதிபதி கூட்டுத்தாபனங்களின் தலைவர்களாக நியமிக்கப்படுபவர்கள் பட்டப்படிப்பை பூர்த்தி செய்திருக்கவேண்டும் அறிவுறுத்தியிருந்தார் என்பதை ஐக்கியதேசிய கட்சி வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

தனது நியமனங்களிற்கு ஜனாதிபதி வேறு விதிமுறைகளை பின்பற்றுகின்றார் என தெரிவித்துள்ள ஐக்கியதேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதி தனது உத்தரவையே மீறியுள்ளார் இது அரசியல் சந்தர்ப்பவாதம் என குறிப்பி;ட்டுள்ளார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42