அமெரிக்கா செல்லவுள்ளார் நிதி அமைச்சர்

Published By: Daya

10 Jan, 2019 | 11:40 AM
image

நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர நாளை வெள்ளிக்கிழமை அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். 

சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக தவணை அடிப்படையில் கடனை கொடுக்க தீர்மானித்த நிலையில் குறித்த கடன் வழங்குவதை  தீடீரென சர்வதேச நாணய நிதியம் நிறுத்தி விட்டதால் இது தொடர்காப கலந்துறையாடல் ஒன்றை மேற்கொள்வதற்காக நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

நிதி அமைச்சரின் செயலாளர் ஆர்.எம்.எச். சமரதுங்க மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி ஆகியோர் நிதியமைச்சருடன் அமெரிக்கா செல்லவுள்ளனர். 

இதன்போது சர்வதேச நாணயநிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மற்றும் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

கடந்த காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட அரசியில் குழப்பங்கள் காரணமாக அமெரிக்கா கடன் வழங்கும் காலத்தை தவணை அடிப்படையில் வழங்குவதாக கூறிய நிலையில் தற்போது அது நிறுத்தியுள்ளது. 

இந்நிலையில் இலங்கை மத்திய வங்கிக்கு,  இந்திய மத்திய வங்கி 400 கோடி அமெரிக்கா டொலரை கடனாக வழங்க இணங்கியுள்ளது. 

இலங்கையில் வெளிநாட்டின்  இருப்புக்களை அதிகரிக்க இலங்கை மத்திய வங்கி, இந்திய மத்திய வங்கியிடம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் குறித்த தொகையை இந்திய மத்திய வங்கி வழங்க தீர்மானித்துள்ளது. 

இது தவிர இன்னும் அமெரிக்க டொலர் பில்லியன் தொகையை பெற்றுக்கொள்ள இந்திய மத்திய வங்கியோடு  இரு வழி பரிமாற்றம் மூலம் கையொப்பம் ஒன்றை மேற்கொள்ள எதிர்பார்த்திருப்பதாக  இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38