பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனாவுக்கு நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் 6 ஆம் திகதி புறப்பட்டுச் செல்கின்றார்.

சீனப் பிரதமர் லீ கேக்கியாங்கின் அழைப்பை ஏற்று சீனா செல்லும் பிரதமர் 9 ஆம் திகதி வரை சீனாவில் தங்கியிருப்பார்.

இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவை வலுப்படுத்தல் வர்த்தக முதலீடுகள் உட்பட பல விடயங்கள் தொடர்பான பேச்சுவார்ததைகளில் பிரதமர் கலந்து கொள்வார்.