கோத்தாவே லசந்தவை படுகொலை செய்தார் -ரஞ்சன் அதிரடி

Published By: Vishnu

09 Jan, 2019 | 04:32 PM
image

(நா.தனுஜா)

ஊடகவியலாளர் லசந்த விக்கிமதுங்கவை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவே படுகொலை செய்தார் என்பதை அறிந்திருந்தும் கூட அவரை ஜனாதிபதி வேட்பாளராகப் பரிந்துரைக்கின்ற நகைப்பிற்குரிய நாடாக எமது நாடு மாறியிருக்கின்றது என நெடுஞ்சாலை, வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு பத்து வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட அவர், 

பணம், அதிகார பலம், பிரபுக்கள் பின்னணி போன்றவற்றால் உண்மை மறைக்கப்பட்டாலும் ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியை படுகொலை செய்தவர் யாரென்று உலகம் அறிந்திருப்பதை போன்று, லசந்தவை கொன்றவர்கள் யார் என்பதை நாட்டில் பெரும்பான்மையானோர் அறிந்தேயிருக்கின்றார்கள் 

சண்டே லீடர் பத்திரிகையில் கோத்தாபய ராஜபக்ஷ தொடர்புபட்டிருந்த மிக் விமான கொள்வனவு பற்ற லசந்த எழுதியிருந்தார். லசந்த கொலை குறித்து பி.பி.சி ஊடகம் கோத்தாபய ராஜபக்ஷவிடம் கேள்வி எழுப்பிய போது அவருக்கு அதிக கோபம் ஏற்பட்டது. 'யார் லசந்த? யார் லசந்த தொடர்பில் அறிந்திருக்கிறார்கள்?" என்ற விதத்திலேயே அவர் பதிலளித்தார். அவருடைய கோபம் மற்றும் எனக்கு கிடைத்துள்ள தகவல்களின் அடைப்படையில் லசந்தவின் கொலையுடன் கோத்தாபய ராஜபக்ஷவே தொடர்புபட்டுள்ளார் எனக் கருதுகின்றேன். 

லசந்தவை கோத்தாபய ராஜபக்ஷ தான் படுகொலை செய்துள்ளார் என அறிந்திருந்தும், அவரை ஜனாதிபதி வேட்பாளராக பரிந்துரைக்கும் நகைப்பிற்குரிய நாடாக எமது நாடு மாறியிருக்கின்றது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10