அனுராதபுரம் நகரத்தில் கடத்தப்பட்ட 18 வயதுடைய  பாடசாலை மாணவி நீர்கொழும்பில் மீட்கப்பட்டுள்ளார்.

அனுராதபுரம் நகரத்தில் 18 வயதுடைய பாடசாலை மாணவி நண்பிகளோடு மேலதிக வகுப்பிற்கு சென்று கொண்டிருந்த போது, முச்சக்கரவண்டியில் வந்த சந்தேக நபர் குறித்த மாணவியை தாக்கி பலவந்தமாக கடத்திச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மாணவியை கடத்திய நபர் அனுராதபுரம் இரண்டாம் கட்டை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய திருமணமான நபர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் மீட்கப்பட்ட மாணவியை  பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளதுடன் பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர்.

கடத்தப்பட்ட மாணவிக்கு காதல் தொடர்பு ஒன்று இருந்ததாகவும், அவரது முன்னாள் காதலரே இவ்வாறு யுவதியைக் கடத்தியிருக்க வேண்டும் என்றும் பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.