தமிழரின் முயற்சியால் புனித மாட்டீனார் பாரம்பரியத்திற்கு ஜேர்மனில் அங்கீகாரம்

Published By: Digital Desk 4

09 Jan, 2019 | 03:04 PM
image

இலங்கைத் தமிழரின் முயற்சியால் புனித மாட்டீனார் பராம்பரியம் யேர்மன் மாநிலத்தில் சடப்பொருள் அற்ற கலாச்சாரவழக்கமாக ( The inventory of the intangible Cultural Heritage of North – Rhine Westphalia) அங்கீகாரம்.

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவரும், யேர்மனி கெம்பென் (Kempen) நகரசபை அங்கத்தவரும், பிரதேசசபை உறுப்பினருமான ஜெயரட்ணம் கனீசியஸ் (Jeyaratnam Caniceus) மற்றும் யேர்மனியரான Rene Bongartz ஆகியோர் எடுத்த தீவிர முயற்சி காரணமாக புனித மாட்டீனார் பாரம்பரியம் ஜேர்மன் NRW மாநிலத்தில் சடப்பொருள் அற்ற கலாச்சார வழக்கமாக அங்கீகாரம் பெற்றுள்ளது. 

இதை உறுதிப்படுத்தும் சான்றிதழ் கடந்த 25.10.2018 அன்று டுசில்டோப் மாநில சட்டசபையில் இடம்பெற்ற நிகழ்வில் ஜெயரட்ணம் கனீசியஸ் மற்றும் யேர்மனியரான Rene Bongartz ஆகியோரிடம் கலாச்சார அமைச்சின் செயலர் Klaus Kaiser இனால் கையளிக்கப்பட்டது. 

இந் நிகழ்வுகுறித்து ஜேர்மன் தொலைக்காட்சி, வானொலி மற்றும் பல்வேறு பத்திரிகைகள் முக்கியத்துவம் கொடுத்திருந்தன.

இதன் அடுத்த கட்டமாக இவர்கள் இருவரும் ஜேர்மன் நாடுமுழுவதும் இதை ஒரு சடப்பொருள் அற்ற கலாச்சாரவழக்கமாக ( The inventory of the intangible Cultural Heritage of Germany) அங்கீகரிக்க ஜேர்மன் மத்திய கலாச்சாரஅமைச்சிடம் விண்ணப்பிக்கவுள்ளனர்.

இதன் நோக்கம், மக்களால் முன்னெடுக்கப்படும் இப் பாரம்பரிய கலாச்சாரவழக்கத்தை யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கச் செய்வதாகும். இதற்காக கனீசியஸ், ஏற்கனவே ஐரோப்பிய ரீதியாக தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளார்.

ரோமன் கத்தோலிக்க திருஅவையில் புனிதமாட்டீன் மிகப் பிரபலமான புனிதர்களில் ஒருவர் என்பதுடன், ஒததொடொக்ஸ், அங்கிலிக்கன் மற்றும் இவாங்கெலிஸ் ஆலயங்கள் இவருக்கு மிகவும் மதிப்பளிக்கின்றன.

உலகெங்கும் இவர்பெயரில் நகரங்கள், கிராமங்கள், தீவுகள் , வீதிகள், ஆலயங்கள், குருமடங்கள், பாடசாலைகள், யாத்திரைவழிகள் போன்றவை உள்ளன. புனித மாட்டீனார் விழா ஜேர்மனி NRW மாநிலத்தில் (North – Rhine Westphalia) நீண்ட பாரம்பரியமான வகையில் கொண்டாடப் படுகின்றது, கெம்பென் நகரில் ஒவ்வொருவருடமும் கார்த்திகை 9 மற்றும் 10ம்நாட்களில், இரு பெரிய ஊர்வலங்களாக இவ்விழா இடம்பெறுவதுடன், இதில் ஆயிரக்கணக்கான சிறுவர்களும் பெரியோர்களும் கைகளில் விளக்குகளை ஏந்தி, பாடல்களைப் பாடியவாறு பங்கேற்பர்.

மாட்டீன், இவரது பிறப்புப் பெயர் மாட்டீனுஸ், இவர் ஒரு உரோமிய இராணுவச் சிப்பாயின் மகனாக இன்றைய கங்கேரிநாட்டில் பிறந்தார். தனது இளம் பிராயத்தைத் தனது தந்தையின் ஊரான இத்தாலிய பாவியாவில் கழித்தபோது முதல்முறையாக கிறிஸ்தவத்தை அறிமுகப்படுத்திக் கொண்டதுடன், தனது 10 ஆவது வயதில் திருமுழுக்குப் பெறும் குழுவில் தன்னை இணைத்துக் கொண்டார். இருப்பினும் சிப்பாயின் மகனான இவர் கட்டாயமாக இராணுவத்தில் இணையவேண்டும் என்ற சட்டத்திற்குக் கட்டுப்பட வேண்டியவரானார்.

அதற்கமைய தனது 15 ஆவது வயதில் கொன்சன்ரைன் அரசரின் மெய்ப்பாதுகாவலர் படையில் சேர்க்கப்பட்டு மைலாண்ட் சென்றார். இதன் பின்னர் இவர் பலஆண்டுகளாக அங்குகடமையாற்றியபோதும் தனது 35 ஆவது வயதில் திருமுழுக்குப்பெற்று பின் சில போர்களில் பங்கேற்க மறுப்புத் தெரிவித்ததால் இவரது 40 ஆவது வயதில் 25 வருடசேவையின் பின்பு இராணுவ சேவையில் இருந்துவிடுவிக்கபப்பட்டார். 

இதன்பின் 361 ஆம் ஆண்டில் தன்னை குருமடத்தில் சேர்த்துக்கொண்டு துறவியாகமாறினார். அவசர வேளைகளில் உதவுதல் மற்றும் அதிசயங்களை நிகழ்த்துபவர் என்பதால் மாட்டீன் விரைவில் அப்பிரதேசம் முழுவதும் பிரபலமானார். 372 ஆம் ஆண்டில் அவர் தூர்ஸ் மறை மாவட்ட ஆயராக நியமனம் பெற்றார்.

அப்படியிருந்தும் ஆயராக புகழுடன் நகரத்தில் வாழாமல் நகர எல்லைச் சுவருக்குப் பக்கமாக இருந்த பலகைக் குடிசையில் வாழ்ந்தார். இவர் 397 ஆம் ஆண்டு கார்த்திகை 8 இல் தனது 81 ஆவது வயதில் இறைவனடி சேர்ந்ததுடன், இவரது உடல் கார்த்திகை 11 இல் தூர்ஸ் நகரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் புடைசூழ நல்லடக்கம் செய்யப்பட்டது. 

இவரது இரக்க சுபாவம் காரணமாக புனிதமாட்டீன் பிரயாணிகள், ஏழைகள், இரவலர்கள், குதிரைவீரர்கள்; இதற்கும் மேலாக கைதிகள், சிறைக் கைதிகள் மற்றும் போர்வீரர்களின் பாதுகாவலராக மதிப்பளிக்கப்படுகிறார்.

இவர் விசேடமாக குளிரில் வாடிய ஒரு ஏழைக்குத் தனது மேலங்கியை வழங்கி முன்மாதிரிகையாக இருந்தமை காரணமாக நன்கு அறியப்பட்டவர். கி.பி. 480 ஆண்டில் புனித மாட்டீனாரின் நினைவுநாளாக கார்த்திகை 11 ஆம் நாள் அறிவிக்கப்பட்டது. 

இந்தநாளில் இவர்பெயரில் எடுக்கப்படும் விழாவின் மையப் புள்ளியாக குளிரில் வாடும் ஏழைக்கு அவரது மேலங்கியைக் கொடுப்பதை நடித்துக் காட்டிநினைவூட்டும் நிகழ்வு அமையும். புனித மாட்டீனார் விழா ஒன்றே, யேர்மனியில் அனைத்துச் சமயங்களாலும், அனைத்துத் தலைமுறையினராலும், அனைத்துக் கலாச்சாரம் மற்றும் அனைத்துசமூகத் தளங்களாலும் ஒன்றுசேர்ந்து கொண்டாடப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கையில் ஆறு நகரங்கள் , தம்புள்ள, பொன்னநறுவை, சிகிரியா, காலி, கண்டி (Unesco World Heritage) அதைவிட இரண்டு யுனெஸ்கோ இயற்கை உலக பாரம்பரியம் (Unesco natural world Heritage) சிங்கராஜ தேசிய பூங்கா, மத்திய மலைநாடு (Sinharaja national Park, The Central Highlands) மேலும் அண்மையில் Rukda Natya, Srilanka உள்ள பாரம்பரிய சரம் பொம்மை நாடகம் மனிதகுலத்தின் யுனெஸ்கோ குறிப்பிடத்தக்க கலாச்சார பாரம்பரியம் ( Rükda Natya, Traditional String Puppet drama In Srilanka The Unesco Intangible cultural Heritage of Humanity) ஆக அங்கீகாரம் பெற்றுள்ளது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி...

2024-03-19 01:21:06
news-image

தீர்மானங்களை எடுக்கும் சகல மட்டங்களிலும் பெண்களை...

2024-03-19 01:13:05
news-image

கொழும்பு புதுச்செட்டித் தெரு சீரடி சாய்பாபா...

2024-03-18 17:48:48
news-image

மட்டக்களப்பு - திருப்பழுகாமம் விபுலானந்த வித்தியாலயத்தின்...

2024-03-18 16:54:24
news-image

ஏறாவூர்ப்பற்றில் பெண்களுக்கு கௌரவம்

2024-03-18 16:07:34
news-image

யாழில் மேடையேறவுள்ள 'வேள்வித் திருமகன்' திருப்பாடுகளின்...

2024-03-18 09:57:35
news-image

கடற்தொழிலில் ஈடுபடும் பெண்களை ஊக்குவித்த சர்வதேச...

2024-03-16 20:27:24
news-image

ரொட்டறியன் தலைவரை தெரிவு செய்வதற்கான பயிற்சிபட்டறை...

2024-03-16 17:37:14
news-image

கொழும்பில் இடம்பெற்ற ஸ்ரீ தியாகராஜர் ஆராதனை

2024-03-17 15:42:24
news-image

இசைத்துறை வாய்ப்பு

2024-03-16 16:21:33
news-image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு...

2024-03-16 16:21:01
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-16 00:16:15