இவ்வருட தேர்தலில் ஐ.தே.கட்சியே வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்:யூ.கே. ஆதம்லெப்பை 

Published By: R. Kalaichelvan

09 Jan, 2019 | 12:29 PM
image

இவ்வருடம் தேர்தல் ஆண்டாகவே அமையப் போகின்றது. அத்தேர்தல் அனைத்திலும் ஐக்கிய தேசிய தேசிய கட்சியே வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் கிடையாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளாரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினருமான யூ.கே. ஆதம்லெப்பை தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கான ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களை தெரிவு செய்யும் கூட்டம்  இன்று லொயிட்ஸ் வளாகத்தில் இடம்பெற்றது. இக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசியக் கட்சியின் பாங்காளிகளாக அம்பாறை மவட்ட மக்களும் இணைந்து கொண்டு எதிர்கால அபிவிருத்தி மற்றும் வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தினையும் அடைந்துகொள்ள வேண்டும்

ஐக்கிய தேசிய கட்சியுடன் ஏனை சிறுபான்மை கட்சிகளும் இணைந்து ஐக்கிய தேசிய முன்னணி என்ற புதியதொரு பலமிக்க அமைப்பாக எதிர் வரும் தேர்தல்களில் களமிறங்கவுள்ளதால் தமிழ், முஸ்லிம் மக்கள் அச்சமின்றி ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்பட முன்வர வேண்டும்.

அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் தொகுதியில் மூவின மக்களும் வாழ்ந்து வருகின்றனர். இத்தொகுதியில் மிகவும் கஷ்டப் பிரதேசங்கள், மீள்குடியேற்ற கிராமங்கள் மற்றும் செய்கை பண்ண முடியாத விவசாயக் காணிகள் என தீர்க்கப் படாத பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. இவ்வாறான பிரச்சினைகளுக்கு உடன் தீர்;வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாண்டின் ஆரம்பப் பகுதியில் கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு தொகுதிக்கும் 300 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு செய்வதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. எனவே அதற்கான வேலைத்திடடங்களை அடையாளம் கண்டு துரித அபிவிருத்தி நடவடிக்கைக்கு பங்காற்ற வேண்டும்.

மேலும் சமூர்த்தி நலனுதவி பெறுவோரின் எண்ணிக்கையையும் அதிகரிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் கடந்த போட்டி பரீட்சையிலிருந்து சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை நியமனம் செய்வதற்கும் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.

வீடமைப்பு மற்றும் கலாசார விவகார அமைச்சர் சஜீத் பிரேமதாசவின் ஆலோசனையின் பேரில் வீடமைப்பு அதிகார சபையினால் திருக்கோவிலில் அமைக்கப்பட்ட 35 வீடுகளைக் கொண்ட வீட்டுத் திட்டம் எதிர் வரும் 26ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது. 

அந்நிகழ்வில் ஆதரவாளர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் அரச காணிகள் இல்லாமை பாரிய குறைபாடாக இருந்து வருகின்றது. இதனால் வீட்டுத் திட்டம் மற்றும் இதர அரச வேலைத்திட்டங்கள், அரசாங்க கட்டடங்கள் அமைப்பது, பொதுவேலைத்திட்டங்களை முன்னெடுப்பதில் பாரிய சவால்கள் காணப்படுவதுடன் அனேகமான வேலைத்திட்டங்கள் திரும்பிச் செல்லும் அவலமும் காணப்படுகின்றது  என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58