புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் தீர்மானிக்க வேண்டும் -அகிலவிராஜ் 

Published By: R. Kalaichelvan

08 Jan, 2019 | 07:37 PM
image

சிறுவர்களின் உளவியல் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை தொடர்பாக தீர்மானம் எடுப்பது அத்தியாவசியமானது என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்ல இசுறுபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற புலமை பரிசில் பரீட்சை தொடர்பான ஆய்வுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில், 

சிறுவர்களுக்கு ஏற்படும் உளவியல் தாக்கங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை தொடர்பாக காத்திரமான தீர்மானமொன்று எடுப்பது அத்தியாவசியமாகும்.

இருந்த போதிலும் குறைந்த வருமான பெறும் சிறார்களுக்கு புலமை பரிசில் வழங்கல் மற்றும் புதிய பாடசாலைகளுக்கு அனுமதி வழங்கல் ஆகிய விடயங்களில் உரிய கவனம் செலுத்தி தீர்மானம் எடுக்க வேண்டும் என்றார். 

இந்த ஆய்வு குழுக்கூட்டத்துக்கு கல்வி அமைச்சின் செயலாளர், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகள், சிறுவர்கள் தொடர்பான விசேட மருத்துவ நிபுணர்கள்,  பல்கலைகழக பேராசிரியர்கள்,தேசிய கல்வி நிறுவன அதிகாரிகள், பரீட்சை ஆணையாளர் உட்பட கல்வி அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55