நேர்காணல் ஜீவா சதாசிவம்

ஒன்­பது மொழி­களில்  40 ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்ட பாடல்கள் 17,695 தனிப் பாடல்கள் என கின்னஸில் இடம்பிடித்து  சாதனை படைத்து தனக்­கென தனித்­து­வத்தை பெற்­றி­ருக்கும் தென்­னிந்­திய பிர­பல பின்­னணிப் பாடகி பி.சுசீலா  இசைக்­கா­கவே தனது  வாழ்க்­கையை அர்ப்­ப­ணித்­ததில் மகிழ்ச்சி என்றும்  நல்ல வாய்ப்பு அமைந்தால் இப்­போதும் பாடத் தயா­ரா­கவே  இருப்­ப­தா­கவும் பெருமிதம் கொள்கின்றார். தமிழ், தெலுங்கு, மலை­யாளம், கன்­னடம் என பல்­வேறு மொழி­களில் சுமார் 40 ஆண்டு கால­மாக இசைத்­து­றையில் தன்னை அர்ப்­ப­ணித்­துள்ளார். எல்­லோ­ருக்கும் பாடும் திறமை இருக்­கின்­றது. எல்லோராலும் பாடவும் முடியும். அவ்வாறு பாடும் பாடல்கள்  எல்லா தலை­மு­றை­யி­னரும் ர­சிக்­கக்கூடியதாக இருக்கின்றதா?  சினி­மாவில் 40 ஆண்­டுகள் என்­பது சாதா­ரண விட­ய­மல்ல. 

காலத்­துக்­கேற்­ற­வ­கையில் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் தனித்துவமாக பாடு­வது என்­பது ஒரு சவால் தான்...ஆம் பி.சுசீலாவின் பாடல்களைக் கேட்கும் போது அவர் குறித்த அந்த பாடலுடன் எவ்வாறு ஒன்றித்துப் போய்  பாடியுள்ளார்  என்பது புரியும். அவ்­வாறு பாடு­வ­தாலோ தெரி­ய­வில்லை, நான்­கா­வது தலை­மு­றை­யி­ன­ருக்கும் பாடல்­களை பாடக்­கூ­டி­வ­ராக பல்­லா­யி­ரக்­க­ணக்­கான ர­சி­கர்கள் விரும்பக் கூடிய இசை தேவ­தை­யாக இருக்­கின்றார். 

ஏன்? தென்­னிந்­திய , உள்­நாட்டு தொலைக்­காட்­சி­களில் சிறு­வர்­க­ளுக்­கென பாடல் போட்­டிகள் மற்றும் வெளி­ய­ரங்க நிகழ்­வு­களில் சிறு­வ­யது முதல்  பெரியோர் வரையில் பெரும்பாலும் பாடுவதும், ரசிப்பதும் பழைய பாடல்கள் தான். என்­னதான் புதிய பாடல்கள் வந்­தாலும் சுசீலா, டி.எம்.எஸ். பாடல்­க­ளுக்­கென்றால் ஒரு தனி மவு­சுதான்.  இசை ரசி­கர்­களின் முற்­றத்து மரங்­க­ளி­லி­ருந்து ஓயாமல்   கூவிக்  கொண்­டி­ருக்கும் குயி­லொன்றை நினைவு படுத்தும்  பி.சுசீலா கடந்த 65 வரு­டங்­க­ளுக்கும்  மேலாக  தமி­ழர்­களின் பெரு­மைக்­கு­ரிய  அடை­யா­ளங்­களில்  ஒன்­றாகக்  கொண்­டாடப்படு­பவர். அவ­ரு­டைய மந்­திரக் குரலில் அபூர்­வ­மாக இணைந்து  விட்ட இனி­மையும், பல்­வகை உணர்ச்­சி­களும் ,உச்­ச­ரிப்பும் ரசி­கர்­களைக் கட்­டுண்­ட­வர்கள்  ஆக்­கிற்று .

ஆந்­திர மாநி­லத்தை சேர்ந்த பி .சுசீலா   இசைக்கு மொழி எல்­லைகள் கிடை­யாது  என்­பதை  நிரூ­பித்­தவர்.  1951 ஆம் ஆண்டு'ஏதுக்­க­ழைத்தாய்' ஜபெற்றதாய்ஸ பாடல்  மூலம்  அறி­மு­க­மான பி.சுசீலா பாடிய புகழ்பெற்ற  இன்­னொரு  பாடல் 'அழைக்­காதே !'ஜமணா­ளனே  மங்­கையின்  பாக்­கியம்ஸ. அழைப்­பு­களை  மறு­த­லிக்கும்  விதத்தில்  இந்தப்  பாடல்கள் எதேச்­சை­யாக  அமைந்த  போதிலும்  அந்த  இனிய  குரலை  இரு­க­ரங்கள்  நீட்டி  வர­வேற்று  தங்கள் நெஞ்­சங்­களில்  ரசி­கர்கள் அமர்த்திக்  கொண்­டார்கள் .

சென்னை வானொ­லியில் ‘பாப்பா மலர் நிகழ்ச்­சியில்’ பாடத்­தொ­டங்­கிய இவரின் இசைத் திற­மையைக் கண்­டவர்  பண்­டி­யாலா நாகேஸ்­வர ராவ். இயக்­குனர் கே.எஸ். பிர­காஷ்ராவ், தன்­னு­டைய ‘பெற்­றதாய்’ திரைப்­ப­டத்தில் முதன் முத­லாக இவரைப் பாடவைத்தார். அந்தப் படத்தில் இடம்­பெற்ற ஏதுக்கழைத்தாய் என்­கிற பாடலை ஏ.எம்.ராஜா­வுடன் இணைந்து பாடினார். பிறகு ஏ.வி.எம். ஸ்டுடி­யோவில் சிறிது காலம் பாடிய இவர், லஷ்­மி­நா­ரா­யணம் என்­ப­வ­ரிடம் தமிழ் கற்று 1955 ஆம் ஆண்டு வெளி­வந்த ‘கண­வனே கண்­கண்ட தெய்வம்’ என்­கிற படத்தில் ‘எந்தன் உள்ளம் துள்ளி விளை­யா­டு­வதும்’ மற்றும் ‘உன்னைக் கண் தேடுதே’ போன்ற பாடல்­களை பாடினார். இந்தப் பாடல்கள் இவ­ருக்கு நல்ல பெயரை பெற்று தந்­தது. 

நாகேஸ்­வ­ரராவ், விஸ்­வ­நாதன் – ராம­மூர்த்தி, எம். எஸ். விஸ்­வ­நாதன், இளை­ய­ராஜா, ஏ.ஆர் ரஹ்மான் என பல இசை­ய­மைப்­பா­ளர்­களின் இசையில் பாடிய அவர், தமிழ், தெலுங்கு, மலை­யாளம், கன்­னடம், பெங்­காலி, இந்தி, ஒரியா, சமஸ்­கி­ருதம், சிங்­களம் எனப் பல இந்­திய மொழி­களில் 60 ஆண்­டு­க­ளாக 40,000-க்கும் மேற்­பட்ட பாடல்­களைப் பாடி இருக்­கிறார் இவர். டி.எம்.சௌந்­த­ரா­ஜ­னுடன் இணைந்து 727 பாடல்கள், எஸ்.பி.பால­சுப்­பி­ர­ம­ணி­யத்­துடன் இணைந்து 257 பாடல்கள் என பாடிய இவர் 5 முறை தேசிய விரு­துகள், 6 முறை ஆந்­திர அரசின் விரு­துகள், 3 முறை தமி­ழக அரசின் விரு­துகள், 2 முறை கேரள அரசின் விரு­துகள் என பல விரு­து­க­ளையும் பாராட்­டு­க­ளையும் குவித்த இவ­ருக்கு, இந்­திய அரசின் உய­ரிய விரு­து­களில் ஒன்­றான பத்ம விபூஷண் விருதும் கிடைத்­தது.  1955 ஆம் ஆண்டிலி­ருந்து 70 களின் பிற்­ப­குதி  வரை தமிழ்த் திரை­யு­லகின்  முன்­னணி நாய­கியர்  பல­ருக்கும் பின்­னணிப் பாட­கி­யாக இவரே  ஜொலித்தார். பழம் பெரும்  இசை­ய­மைப்­பா­ளர்­க­ளான  ஆதி நாரா­ய­ணராவ், ராஜேஸ்­வ­ரராவ், சல­ப­திராவ், நிஜ­லிங்­கப்பா, கே .வி .மகா­தேவன், ஏ.எம். ராஜா, விஸ்­வ­நாதன் -ராம­மூர்த்தி  இரட்­டை­ய­ருடன்  மட்­டு­மல்­லாமல்  பின்­னாட்­களில்  வந்த சங்கர் – -கணேஷ் இரட்­டையர், இளை­ய­ராஜா ,ஏ .ஆர் .ரஹ்மான் ,வித்­யா­சாகர் போன்­ற­வர்­க­ளு­டனும்  தலை­முறை  வேறு­பா­டு­களைத்  தாண்டித்   தன்  திற­மையை  அவர்  நிரூ­பித்­தி­ருக்­கிறார் .

ஆயி­ரக்­க­ணக்­காண பாடல்கள்... இலட்­சக்­க­ணக்­காண  ர­சி­கர்கள்...சுசீலா இலங்­கைக்கு வரு­வது பற்­றி­ 3 வாரங்­க­ளுக்கு  முன்பு அறிந்து அப்­போ­தி­லிருந்தே  அவரை நேர்காண வேண்டம் என்ற ஓர் ஆசை. ஆனால், மனதில் ஓர் அச்சம் இலங்கை வரும் அவர் நேர்­காணல் தரு­வாரா என்று பல எண்­ணங்கள்...  எப்­ப­டி­யா­வது அவரை நேர்­காண வேண்டும் என்ற நான் முன்­னெ­டுத்த தொடர் முயற்சி வீண்­போ­க­வில்லை என்று தான் கூற வேண்டும். அவரை நேர்­காணல் செய்­வ­தற்கு ஏற்­பாடு செய்து தந்த கொழும்பு கம்­பன்­க­ழ­கத்­திற்கும் கம்­ப­வா­ரிதி ஜெயராஜ் ஐயா­வுக்கும் முக்­கி­ய­மாக விரி­வு­ரை­யாளர் ஸ்ரீ பிர­சாந்தனுக்கும் நன்றி கூறி கொண்டு பின்­னணிப் பாடகி சுசீலா வழங்­கிய நேர்­கா­ணலை தொடர்­கின்றேன். 

பத்­ம­பூஷன் விருது, 6 முறை தேசிய விருது, கலை­மா­மணி விருது, ஆந்­திர மாநில அர­சி­னரின் விருது ரகு­பதி பெங்­கையா விருது உள்­ளிட்ட பல தரப்­பட்ட விரு­து­களை பெற்­றுள்ள நீங்கள் கொழும்பு கம்பன் கழ­கத்­தினால் வழங்­கப்­பட்­டுள்ள  'கம்பன் புகழ்'  விருது  கிடைத்­தமை பற்றி என்ன கூற விழை­கின்­றீர்கள்?

'கம்பன் புகழ் விருது' கிடைத்­த­மை­யிட்டு எனக்கு பெரும் மகிழ்ச்சி. ரொம்ப பிர­மா­த­மாக இருந்­தது. அவ்­வி­ருது கிடைக்கும் அத்­த­ரு­ணத்தில் நான் சொர்க்­கத்தில் இருப்­பது போல உணர்ந்தேன். கம்­ப­வா­ரிதி ஜெயராஜ் என்னை இலங்­கைக்கு அன்­பாக வர­வ­ழைத்து  இவ்­வி­ரு­தினை கொடுத்­துள்­ளார். மிகவும் அன்பு கலந்­த­வர்­களே இலங்கைத் தமிழர்கள். உலகில் எப்­பா­கத்­திலும் இசையை விரும்­பு­கின்­ற­வர்கள் அதி­க­மாக இருந்­தாலும் இலங்­கையில் உள்­ள­வர்கள் இசையில் அதி­க­ளவு ஈடு­பாடு கொண்­ட­வர்கள். இலங்­கையில் இசைக்­கென தனி­ம­திப்பு  உண்டு. 

20 வரு­டங்­களின் பின்னர் இலங்­கைக்கு வந்­தி­ருக்­கின்­றீர்கள். இந்த அனு­பவம் எவ்­வாறு இருக்­கின்­றது?

ஆரம்­பத்தில் இருந்த ர­சி­கர்­களை விட இப்­போது ர­சி­கர்கள் அதிகமாக உள்ளனர். இலங்­கையில் உள்­ள­வர்கள் இசைக்கு அடி­மை­யா­ன­வர்கள்.  இசைப்­பி­ரி­யர்கள். மிகவும் அன்­புள்­ளங்­கொண்­ட­வர்­களே அதிகம்.  

ஆரம்­ப­கா­லத்தில்  பல இசை­ய­மைப்­பா­ளர்கள் மற்றும் தயா­ரிப்­பா­ளர்­க­ளுடன் இணைந்து வேலை செய்­த­தற்கும் தற்­போ­தைய நிலை­மைக்கும் எவ்­வா­றான வித்­தி­யாசம் இருக்­கின்­றது என்­பதை உணர்­கின்­றீர்கள்? 

இது­வ­ரைக்கும் அவ்­வாறு உணர்ந்­த­தில்லை. ஏனெனில், சம்­பந்­தப்­பட்ட இசை­ய­மைப்­பா­ளர்­களோ, தயா­ரிப்­பா­ளர்­களோ தீர்­மா­னித்தே எம்மை பாட அழைக்­கின்­றனர். யார் யார் இந்த பாடல்­களை பாடினால் சிறப்­பாக இருக்கும் என்று முன்­கூட்­டியே தீர்­மா­னித்து எம்மிடம் கொடு­க் கின்­றனர். அதனால் இது­வரை அவ்­வாறு நான் வித்­தி­யா­சத்தை உணர்ந்­த­தில்லை. இறு­தி­யாக இளை­ய­ரா­ஜாவின் மகனின் இசை­யிலும் நான் பாடி­யி­ருக்­கின்றேன்.  சிறு­வ­யது முதல் இலங்கை வானொலியை கேட்டு இர­சிப்போம். எந்­த­பாட்டு வந்­தாலும் இலங்கை வானொலியில் ஒலி­ப­ர­ப­்­பா­கி­விடும். 

பல தசாப்­தங்களாக உங்­க­ளது இசைப்­ப­யணம் எவ்­வித தடை­யு­மின்றி நீடித்துச் செல்­கின்­றது. அவ்­வா­றான உங்­க­ளது தனித்­து­வத்­திற்கு காரணம் என்ன?

கட­வு­ளைதான் நான் கேட்க வேண்டும். கடவுள் கொடுத்த குரல்.  

டி.எம்.எஸ். இன் மரணம் உங்­களை பாதிப்­ப­டையச் செய்­துள்­ளதா?

அவ­ரது மரணம் எனக்கு மட்­டுமா? இவ்­வு­லகில் உள்ள அனை­வ­ரையும் பாதிப்­ப­டையச் செய்­தி­ருக்­கின்­றது. நாம் இரு­வரும் இணைந்து நிறைய பாடல்­களை பாடி­யுள்ளோம். ஓர் ஆண் குரல் என்றால் அது டி.எம். எஸ். ஆகத்தான் இருக்க வேண்டும். அவ­ரது மறைவு பெரும் வேத­னைக்குரியது. நானும் பாடும் போது டி.எம்.எஸ். எனக்கு நிறைய விட­யங்கள் சொல்லிக் கொடுத்­தி­ருக்­கின்றார். அம்மா நீங்கள் இவ்­வாறு தான் பாட வேண்டும். உங்­க­ளது உச்­ச­ரிப்பு இவ்­வாறு தான் இருக்க வேண்டும் என்று கூறுவார். தடங்கல் இன்றி பாட வேண்டும். என்றால் மூச்சு சரி­யாக இருக்க வேண்டும். மூச்சுப் பயிற்­சி­யையும் சரி­யாக சொல்லிக் கொடுப்பார்.

 இன்­றைய தலை­மு­றை­யினர் நீங்கள் பாடிய பாடல்­களை பாடு­கின் றார்கள். அது எவ்­வாறு இருக்­கின்­றது?

இன்­றைய இளைய தலை­மு­றை­யினர் மிகவும் சிறப்­பாகப் பாடு­கின்­றனர். கேட்­ப­தற்கு அரு­மை­யாக இருக்­கின்­றது. ஆனால், குரல் வளத்­தில் ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் ஒவ்­வொரு தனித்­துவம் இருக்­கின்­றது என்­பதை மறுப்­ப­தற்­கில்லை. என் குரல் என்னு­டை­ய­துதான். ஆனால் ஒரு சிலர் வேறு பாட­கர்கள் பாடு­வ­தைப்­போல பாடுவதற்கு முயற்­சிக்­கின்­றார்கள். 

உங்­க­ளது தாய் மொழி வேறு. ஆனால் தமிழ் மொழியில் எவ்­வாறு இப்­படி தெளி­வாக பாடு­கின்­றீர்கள்?

    எனது இரத்­தத்தில் தமிழ் ஊறி­யி­ருக்­கின்­றது போல. எல்லா மொழி­க­ளிலும் பாடும் போது இத­னைத்­தான் கேட்­கின்­றார்கள். எல்லாம் கட­வுளால் அரு­ளப்­பட்­டது என நான் உணர்­கின்றேன். எனது தொண்­டையில் 32 ட்ரெக் ஓடு­கின்­றது என நான் நினைக்­கின்றேன்.

தமிழ் மொழியில் இலட்­சக்­க­ணக் கான ர­சி­கர்கள் இருப்­பதைப் போல வேறு மொழி­க­ளிலும் ர­சி­கர்கள் இருக்­கின்­றார்­களா?

தமிழ், தெலுங்கு, கன்­னடம் என பல­த­ரப்­பட்ட மொழி­களில் அதி­க­ள­வான ர­சி­கர்கள் இருக்­கின்­றார்கள். 

 ரீமிக்ஸ் பாடல்கள் பற்றி...

ரீமிக்ஸ் பாடல்கள் என்று தெரி­யா­ம­லேயே நானும் ஆரம்­பத்தில் பாடி விட்டேன். ஆரம்ப காலத்தில் நானும் டி.எம்.எஸ்.ஸ{ம் பாடிய பாடல்­களே ரீமிக்ஸ் பண்­ணப்­பட்டு வரு­கின்­றன. அவ்வாறு செய்வது என்னைக்கவரக் கூடியதாக இல்லை. முன்பு போல படங்கள் இல்லை. இப்போதுள்ள  இசை, சினிமாவின் தரம்   என்­பதை நீங்­களும் அறிந்­தி­ருக்­கின்­றீர்கள். ஒரு பாட்டு பாடி­ய உடனே அதனை பெரும் திருப்­தி­யாகவும் சந்தோஷமாகவும் பாட­கர்கள் நினைக்­கின்­றார்கள். அவ்­வாறு நினைப்­பது தவறு என்று தனது அனுபவங்கள் சிலவற்றை மாத்திரம் எம்முடன் பகிர்ந்துக்கொண்டார். 

தொடர்ச்சியாக பேசுவதற்கு சிரமமாக இருந்தாலும்  அந்த சிரமத்தை பொருட்படுத்தாது நேர்காணலை வழங்கிய  பி.சுசீலா அவர்களுக்கு வீரகேசரி சார்பில் நன்றி கூறிக்கொள்கின்றோம். தொடர்ச்சியான முயற்சியுடன் கூடிய பயிற்சி கடவுளின் அருள் மற்றும் அன்பான ரசிகர்களின் ஆசிர்வாதம் ஆகியவையே தனது தனித்துவத்திற்கும் வெற்றிக்கும் காரணம். இளைய தலைமுறையினரும் ஆர்வத்துடன் இசைத்துறையில் வளர வேண்டும் ஊக்குவிக்கும் சுசீலா என்றும் நலமுடன் வாழ பிரார்த்திப்போமாக.