சுதந்திர கட்சிக்கு சந்திரிகா துரோகமிழைக்க மாட்டார் -சாந்த பண்டார  

Published By: R. Kalaichelvan

08 Jan, 2019 | 04:00 PM
image

(எம்.மனோசித்ரா)

சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்துவார் என நாம் நம்பவில்லை. அத்தோடு அவருடன் இணைந்து சுதந்திரகட்சிக்குள் குழுவொன்று கட்சியைவிட்டு வெளியேறப்போவதாக தெரிவிக்கப்படும் கருத்துக்களும் உண்மைக்கு புறம்பானவையாகும்.

முன்னர் இது போன்றதொரு தவறினைச் செய்து சில காலத்தின் பின்னர் அதனை உணர்ந்து அவர் ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியுடன் இணைந்து செயற்பட்டுள்ளார். எனவே அவர் மீண்டும் இவ்வாறானதொரு தவறினைச் செய்ய மாட்டார் என சுதந்திர கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

சுதந்திரகட்சி காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில், 

பெரும்பாண்மை கிடைக்காது என்பது அவர்களுக்கே தெரியும். 

நாடளாவிய ரீதியிலுள்ள தமிழ் மக்கள் மற்றும் வடக்கு மக்களுக்கும் சுதந்திரகட்சிக்கும் இடைவெளியை ஏற்படுத்தவே அவர்கள் புதிய அரசியலமைப்பை உருவாக்குகின்றனர். உண்மையில் மக்களுக்கு நன்மை தரக்கூடிய வகையில் அரசியலமைப்பொன்றை உருவாக்க அவர்கள் விரும்பினால் ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி பெயரையும் குறிப்பிட்டு சகல கட்சிகளினதும் ஒத்துழைப்புடன் அதனை நிறைவேற்றுவோம் என தெரிவித்திருக்க வேண்டும். இருந்தும் அவர்கள் அவ்வாறு தெரிவிக்கவில்லை. 

சுமந்திரன் போன்ற பிரிவினைவாதிகளால் அவ்வாறானதொரு அரசியலமைப்பு நிறைவேறுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி என்பன ஒருபோதும் இடமளிக்காது. அத்தோடு அரசியலமைப்பு உருவாக்கத்தின் மூலம் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51