அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை விடவும் பெரியதாக இந்தியாவில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் அகமதாபாத்தில் நிர்மானிக்கப்பட்டு வருகின்றது. 

இந்திய ரூபாவில் சுமார் 700 கோடி செலவில் கட்டப்படும் இம் மைதானம் குறித்து கூறியுள்ள குஜராத் மாநில கிரிக்கெட் சங்கத்தின் துணை தலைவர் பரிமள் நாத்வானி, 

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இது குஜராத் மாநில கிரிக்கெட் சங்கத்தின் கனவு திட்டம். இந்த மைதானத்தில் ஒரு லட்சம் பேர் அமர்ந்து போட்டி கண்டுகளிக்க வசதி இருக்கும். என்று தெரிவித்துள்ளார். 

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை விட பெரிய இந்த மைதானத்தில் ஒரே நேரத்தில் 3,000 கார்கள், 10 ஆயிரம் மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றுக்கான தரிப்பிட வசதிகள் கொண்டதாகவும் இருக்கும். மேலும் ஒலிம்பிக் தரத்திலான நீச்சல் குளமும் மைதானத்துக்குள்ளே அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.