அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி இராஜினாமா :செங்கோட்டையனுக்கு கூடுதல் பொறுப்பு

Published By: R. Kalaichelvan

08 Jan, 2019 | 12:45 PM
image

தமிழக விளையாட்டு துறை மற்றும் இளைஞர் நலன்  மற்றும் விளையாட்டு துறையின் அமைச்சராக பதவி வகித்து வந்த அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி இராஜினாமா செய்திருக்கிறார். அவர் வகித்து வந்த துறையை அமைச்சர் கே ஏ செங்கோட்டையனிடம்  கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1998 ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் பகுதியில் கள்ளச்சாராய விற்பனையைக் கட்டுப்படுத்த கோரி நடந்த சாலை மறியல் போராட்டத்தில் அரசின் சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் பாலகிருஷ்ண ரெட்டிக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டது.

அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமியுடன் தலைமை செயலாளர் கிரிஜா வைத்யநாதன் அரசு தலைமை சட்டத்தரணி விஜய் நாராயண் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். 

மேலும் மூத்த அமைச்சர்கள் தங்கமணி வேலுமணி ஆகியோருடனும் அடுத்தடுத்து ஆலோசனைகள் நடத்தப்பட்டன.

இதனையடுத்து நீதிமன்ற உத்தரவை ஏற்று அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தன்னுடைய அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார். இந்த இராஜினாமாவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஏற்றுக்கொண்டார்.

கடந்த 2016 ஆம் ஆண்டில் நடத்த சட்டபேரவைத் தேர்தலில் ஓசூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார். பாலகிருஷ்ண ரெட்டி. இதுவரை நடந்த தேர்தல்களில் ஓசூர் தொகுதியில் திராவிட கட்சிகள் வென்றதில்லை. அதனால் ஓசூர் தொகுதியில் முதன் முறையாக அ.தி.மு.க வெற்றிப் பெற்றதால் வெற்றிப் பெற்ற பாலகிருஷ்ண ரெட்டிக்கு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா  இவருக்கு அமைச்சர் பதவியை வழங்கினார்.  முதலில் கால்நடை துறை அமைச்சராக இருந்தாலும். பிறகு இவர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது.

“அமைச்சர் பொறுப்பில் இருந்து இராஜினாமா செய்து பாலகிருஷ்ண ரெட்டி அளித்துள்ள கடிதம் ஆளுநரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 

இதையடுத்து முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமியின் பரிந்துரையை ஏற்று  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் பொறுப்பை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையனிடம் கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது. ”என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே தற்போது நடைபெற்று வரும் சட்டபேரவைத் கூட்டத்தொடரில் காலையில் அமைச்சராக பங்குபற்றி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சராக பதிலளித்த பாலகிருஷ்ண ரெட்டி நீதிமன்ற உத்தரவின் காரணமாக மாலையில் தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10