பொரளை பகுதியில் ஹெரோயின் வைத்திருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸாருக்க டைத்த விசேட தகவலையடுத்தே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து 127 கிராம் ஹெரோயினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவத்தில் 58 வயதுடைய பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.