ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று நான்கு வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு ஜனாதிபதிக்கு ஆசி வேண்டி ஏற்பாடு செய்யப்பட்ட பிரித் பாராயண நிகழ்வு நேற்று (07) இரவு முதல் இன்று அதிகாலை வரை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

ஹுணுபிட்டிய கங்காராம விகாராதிபதி சங்கைக்குரிய கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரின் பங்குபற்றுதலுடன் இந்த பிரித் பாராயண நிகழ்வு இடம்பெற்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இங்கு இடம்பெற்ற சமய உரையை செவிமடுத்தார். புத்த சாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா உள்ளிட்ட அமைச்சர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதேநேரம் இன்று (08) காலை மகாசங்கத்தினருக்கான அன்னதான நிகழ்வொன்றும் இடம்பெற்றது.

சியம் நிக்காயவின் கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமக்ரி தர்ம மகா சங்க சபையின் மகா நாயக்க தேரர் சங்கைக்குரிய கலாநிதி இத்தேபானே தம்மாலங்கார தேரர், ஸ்ரீ லங்கா அமரபுர மகா நிக்காயவின் மகா நாயக்க தேரர் அக்கமகா பண்டித சங்கைக்குரிய கொட்டுகொட தம்மாவாச மகா நாயக்க தேரர், சங்கைக்குரிய கொடபொல அமரகீத்தி தேரர், சங்கைக்குரிய திருக்குணாமலயே ஆனந்த தேரர், சங்கைக்குரிய அக்குரட்டியே நந்த தேரர், களனி ரஜமகா விகாரையின் விகாராதிபதி பேராசிரியர், கொள்ளுபிட்டியே மஹிந்த சங்கரக்கித்த தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினரும் இங்கு வருகை தந்திருந்தனர்.

ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன உள்ளிட்ட ஜனாதிபதி அலுவலக பணிக்குழாமினரால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.