அமெரிக்க வான் தாக்குதலில் அல்கெய்தா தளபதி பலி

Published By: Vishnu

08 Jan, 2019 | 09:43 AM
image

ஏமனில், அமெரிக்க ராணுவம் நடத்திய வான்தாக்குதலில் அல்-கொய்தா பயங்கரவாத தளபதி பலியானார்.

ஏமனில், அமெரிக்க இராணுவப் படையினர் நடத்திய வான் தாக்குதலில் அல்கெய்தா தீவிரவாத இயக்கத்தின் தளபதி ஜமால் அல்-படாவி உயிரிழந்துள்ளார். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏமனில் அமெரிக்க போர் விமானங்கள் நடத்திய வான்தாக்குதலில் ஜமால் அல்-படாவி கொல்லப்பட்டு விட்டதாக தகவல்கள் பரவின. 

இது குறித்து அமெரிக்கா உடனடியாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை. எனினும் தற்போது அந்த தகவலை அமெரிக்க இராணுவ தலைமையகமான உறுதி செய்துள்ளது.

இது தொடர்பில் அமெரிக்க இராணுவத் தலைமையகம் விடுத்துள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

ஏமனின் மரிப் மாகாணத்தில் உள்ள அல்-கொய்தா தீவிரவாதிகளின் நிலைகள் மீது கடந்த முதலாம் திகதி அமெரிக்க போர் விமானங்கள் வான்தாக்குதல் நடத்தின. இதில் ‘யுஎஸ்எஸ் கோல்’ போர்க்கப்பல் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டு, அமெரிக்காவில் தேடப்பட்டு வந்த அல்-கொய்தா பயங்கரவாத தளபதி ஜமால் அல்- படாவி கொல்லப்பட்டார்.

மேலும் இது குறித்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில், “யு.எஸ்.எஸ்.கோல்’ போர்க்கப்பல் தாக்குதலில் உயிர்த்தியாகம் செய்த நமது கதாநாயகர்களுக்கு நம்முடைய சிறப்பான இராணுவம் நீதியை வழங்கிவிட்டது. நமது வீரர்களை கொன்ற பயங்கரவாதி ஜமால் அல்-படாவி கொல்லப்பட்டுவிட்டார். அல்-கொய்தாவுக்கு எதிரான நம்முடைய போர் தொடரும்” என குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17