அட்டன் -கண்டி  பிரதான வீதியில்  கம்பளை பல்லேகம பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஐவர் படுகாயமடைந்த நிலையில் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்து நேற்று மாலை நிகழ்ந்துள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி வைத்தியசாலையிலிருந்து நோர்வூட் டங்கள் தோட்டத்திற்கு சடலமொன்றை ஏற்றிவந்த சிறியரக லொறியுடன் நாவலப்பிட்டி பகுதியிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற கென்டர் லொறியொன்று மோதுண்டதிலேயே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தில் சிறியரக லொறியின் சாரதி மற்றும் லொறியில் சென்ற மேலும் நால்வர்  படுகாயமடைந்த நிலையில் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக சாரதி கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இவ் விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.