தெற்குக் கடற்பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது 101 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக  இலங்கை கடற்படையினர்  தெரிவித்துள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான கப்பலொன்றை சோதனைக்குட்படுத்தியபோதே பெருந்தொகையான ஹெரோயின்  போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக கடற்படை மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதன்போது அதனை கொண்டு கப்பலில் கொண்டுவந்ததாக கூறப்படும் 10 ஈரானியர்கள், ஒரு பாகிஸ்தானியர் உட்பட 14 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களும் கைப்பற்றப்பட்ட ஹெரோயினும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.

இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை கடற்படையினர் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருடன் இணைந்து முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.