கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் 7 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய கிராண்ட்பாஸ், கொட்டாஞ்சேனை, முகத்துவாரம் மற்றும் மட்டக்குளி ஆகிய பகுதிகளிலேயே நாளை  இரவு 10 மணியிலிருந்து தொடர்ந்து 7 மணித்தியால குறித்த நீர் வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பேஸ்லைன் வீதியின் களனி பாலத்துக்கு அருகிலிருந்து தெமட்டகொடை சந்தி வரையான பிரதான வீதி மற்றும் அதனோடு தொடர்புபட்ட குறுக்கு வீதிகள் ஆகியவற்றிலும் செட்டியார்த்தெரு மற்றும் அதனோடு தொடர்புபட்ட வீதிகளிலும் இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படும்.

எனவே நீர் வெட்டின் பின்னர் சிரமங்களுக்கு உள்ளாகாமல் தற்போதே நீரை சேமித்து வைக்கும் படியும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.