வடக்கு ஆளுநராக பலரின் பெயர்கள் சிபாரிசு!

Published By: Vishnu

07 Jan, 2019 | 08:33 AM
image

வடக்கு மாகாண ஆளுநராக தமிழர் ஒரு வரை நியமிப்பது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 5 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்களை நியமித்திருந்தார்.

இந் நிலையில் வடக்கு மாகாண ஆளுநராக பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவின் தந்தையான மார்சல் பெரேராவை நியமிப்பதற்கு ஜனாதிபதி திட்டமிட்டிருந்த போதிலும் இறுதி நேரத்தில் அந்த முயற்சி கைவிடப்பட்டிருந்தது.

அத்துடன் வட மாகாண ஆளுநராக முன்னான் அமைச்சர் அதாவுட செனவிரத்தினவையும் நியமிக்குமாறு சிபாரிசு செய்யப்பட்டிருந்தது. இதனைவிட கலாநிதி விக்கினேஸ்வரன் மற்றும் வட மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா மற்றும் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமள் ஆகியோரின் பெயர்களும் சிபாரிசு செய்யப்பட்டிருந்தன.

ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த ஒருவரை நியமிப்பதற்கு ஜனாதிபதி விருப்பம் கொண்டிருப்பதாக தெரிகின்றது.

எனவே இன்னும் சில தினங்களுக்குள் வட மாகாணம் உட்பட ஏனைய நான்கு மாகாணங்களுக்கான ஆளுநர்களை ஜனாதிபதி நியமிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06