ஜப்பானின் தென்மேற்கு கடற்கரைக்கு அப்பால் 6.0 ரிச்டர் அளவான பலமான பூமியதிர்ச்சி இன்று தாக்கியுள்ளது.

தலைநகர் டோக்கியோவிலிருந்து சுமார் 350 கிலோமீற்றர் தொலைவிலுள்ள ஹொன்ஸு தீவுக்கு அப்பால் 10 கிலோமீற்றர் ஆழத்தில் இன்று காலை 11.39 மணி அளவில் தாக்கிய இந்தப் பூமியதிர்ச்சியால் சேதங்கள் மற்றும் காயங்கள் ஏற்பட்டதாக இதுவரை அறிக்கையிடப்படவில்லை.