(எம்.ஆர்.எம்.வஸீம்)

மேல் மாகாண ஆளுநராக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலியும் கிழக்கு,மாகாண ஆளுநராக  எம்.எல்.எம்.ஏ. ஹிஸ்புல்லாஹ்வும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று  நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாகாண ஆளுநர்கள் அனைவரையும் உடனடியாக பதவி விலகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 31ஆம் திகதி அறிவித்திருந்தார். அதற்கமைய மறுநாள் ஒன்பது மாகாண ஆளுநர்களும் தங்கள் பதவிகளில் இருந்து இராஜினாமா செய்தனர். அதன் பிரகாரம் புதிய ஆளுநர்கள் நியமனம் இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. 

இதன்போது 9மாகாணங்களில் 5மாகாணங்களுக்கான ஆளுநர்களுக்கான நியமனக்கடிதங்களை ஜனாதிபதி கையளித்தார்.

அதனடிப்படையில்  மேல் மாகாண ஆளுநராக இருந்த ஹேமகுமார நாணயக்காரவுக்குபதிலா அஸாத் சாலியும் மத்திய மாகாண ஆளுநராக இருந்த பீ.பி. திஸாநாயக்கவுக்கு பதிலாக மைத்திரி குணரத்னவும் கிழக்கு மாகாண ஆளுநராக இருந்த ராேஹித்த போகொல்லாகமவுக்கு பதிலாக எம்.எல்.ஏ.எம்.  ஹிஸ்புல்லாஹ்வும் வட மத்திய மாகாண ஆளுநராக இருந்த எம்.பி. ஜயசிங்கவுக்கு பதிலாக சரத் ஏக்கநாயக்கவும்  மற்றும் வட மேல் மாகாண ஆளுநராக இருந்த கே.சீ. லாகேஸ்வரனுக்கு பதிலாக பேஷல ஜயரத்ன பண்டாரவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் ஏனைய மாகாணங்களான தென், வடக்கு, சம்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களுக்கான ஆளுநர்கள்  நியமிக்கப்படவில்லை.