அடிப்படை உரிமையை பாதுகாக்க போராடும் சட்டத்தரணிகளை சிறுமைப்படுத்தாதீர்கள்

Published By: Daya

04 Jan, 2019 | 04:53 PM
image

தன்னை நம்பி நாடிய ஒரு பிரஜையின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்காக பொலிஸார் உட்பட அதிகார சக்திகளுடன் முரண்படுவதற்கும், மோதுவதற்கும் துணியும் சட்டத்தரணி எவரையும் பாராட்டா விட்டாலும், சிறுமைபடுத்தும் விதத்தில் செய்திகளை உருவாக்கி வெளியிடுவது நீதியானது அல்ல என யாழில். உள்ள சிரேஸ்ட சட்டத்தரணி ஒருவர் ஊடகங்களிடம் கோரியுள்ளார். 

அண்மையில் யாழில் உள்ள முன்னணி சட்டத்தரணிகளில் ஒருவரான சர்மினி விக்னேஸ்வரன் சந்தேக நபர் ஒருவரை நீதிமன்றில் சரணடைய வைத்தமை தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது. 

இவ்விடயம் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் உள்ள சிரேஸ்ட சட்டத்தரணி ஒருவர் தெரிவிக்கையில், 

குறிப்பாக குற்ற வழக்கு ஒன்றில் பொலிஸாரினால் தேடப்படும் சந்தேக நபர் ஒருவர் நீதிவானிடம் நேரடியாக சரணடையும் உரிமை உள்ளது. சட்டத்தரணிகள் ஊடாக சந்தேக நபர் சரணடைவதை ஏற்பதோ அல்லது மறுப்பதோ நீதவானின் அதிகாரத்திற்கு உட்பட்டது.

பொலிஸாரால் கைது செய்யப்பட்டால் தான் தாக்கப்பட்டு அல்லது சித்தரவதைக்கு உட்படுத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என்ற கரணமாகவே சட்டத்தரணிகள் ஊடாக சந்தேக நபர்கள் நீதிமன்றில் சரணடைகின்றனர். இந்த நடைமுறை மிக நீண்ட காலமாகவே உள்ளது. 

ஆனால் ஒரு குற்றம் தொடர்பில் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட வேண்டியிருந்தால் சரணடையும் சந்தேக நபரை பொலிஸில் ஒப்படைக்குமாறு சம்மந்தப்பட்ட சட்டத்தரணிக்கு நீதவான் அறிவுறுத்தல் வழங்க முடியும். அவ்வறிவுறுத்தலை சட்டத்தரணிகள் நடமுறைப்படுத்த வேண்டும்.

பொலிஸ் நிலையங்களில் குற்ற விசாரணைகளின் போது சந்தேக நபர்களின் மனித உரிமைகள் மோசமாக மீறப்பட்டமை தொடர்பான ஏராளமான சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவ்வாறு பதிவான சம்பவங்கள் மீதான சட்டத் தீர்ப்புகள் இலங்கை உயர் நீதிமன்றத்தினால் அண்மைக்காலம் வரையில் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் தன்னை நம்பி நாடிய ஒரு பிரஜையின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்காக பொலிஸார் உட்பட அதிகார சக்திகளுடன் முரண்படுவதற்கும், மோதுவதற்கும் துணியும் சட்டத்தரணி எவரையும் பாராட்டா விட்டாலும், சிறுமைபடுத்தும் விதத்தில் செய்திகளை உருவாக்கி வெளிவருவது நீதியானது அல்ல என கவலை தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10