ரஜினிக்கு கட்அவுட்டுகள் வைத்து பாலாபிஷேகம் செய்ய தடை விதித்து பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஐ.எம்.எஸ். மணிவண்ணன் என்பவர் பெங்களூரு சிவில் நீதிமன்றத்தில் கடந்த 26ஆம் திகதி மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, நடிகர் ரஜினிகாந்துக்கு பத்ம விபூஷண் விருது கிடைத்துள்ளதை கொண்டாட அவரது ரசிகர்கள் நகரின் பல்வேறு இடங்களில் கட்அவுட்டுகள், பதாகைகள் வைத்து அதற்கு ஆயிரக்கணக்கான லீற்றர் பாலை ஊற்றி அபிஷேகம் செய்துள்ளனர். உரிய உணவு இல்லாமல் பல குழந்தைகள் பலியாகும் நிலையில் இவர்கள் இப்படி பாலை வீணடிக்கிறார்கள்.

ரஜினிகாந்த் ஒரு பொறுப்பான நடிகர். அவருக்கு நாட்டின் இரண்டாவது உயரிய விருது அளிக்கப்பட்டுள்ளது. அவர் தாமாக முன்வந்து தனக்கு கட்அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்ய வேண்டாம் என்று ரசிகர்கள் கேட்டுக் கொள்ள வேண்டும். ரஜினியின் கட்அவுட், பதாகைகளுக்கு ஊற்றுவதற்காக வாங்கும் பாலை குழந்தைகளுக்கு அளிக்கலாம் அல்லது

ரசிகர்களே குடிக்கலாம். இது தொடர்பாக ரஜினிகாந்துக்கும், அவரது ரசிகர்களுக்கும் நீதிமன்றம் தடை உத்தவிட வேண்டும் என்று தெரி வித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரேகா ரஜினிக்கு பத்ம விபூஷண் விருது கிடைத்துள்ளதற்காக அவரது ரசிகர்களை கட்அவுட், பதாகைகள் வைத்து பாலாபிஷேகம் செய்ய தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.