இவ்வாறு தான் அமைச்சர்களுக்கு டிசம்பர் மாதக் கொடுப்பனவு வழங்கியது !

Published By: Daya

03 Jan, 2019 | 04:35 PM
image

பிரதமர், சபாநாயகர், அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான  டிசம்பர் மாத கொடுப்பனவுகள் அனைத்தும் எவ்வகையான பாகுபாடுமின்றி பாராளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவுகள் பட்டியலின் படியே வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

கொடுப்பனவுகள் வழங்கும் போது பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர், அமைச்சர்களுக்கான பதவிகளை கருத்தில் கொள்ளாமல் பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பள பட்டியலை கருத்திற்கொண்டே இவ்வாறு டிசம்பர் மாதக்கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன.

பொதுவாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுப்பனவு வழங்குவது பாராளுமன்றத்தில் தான். இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு சுமார் 54,285 ரூபாவாகும். 

பிரதமரின் கொடுப்பனவு பிரதமர் காரியாலயத்திலும், எதிர்க்கட்சி தலைவரின் கொடுப்பனவு எதிர்க்கட்சி தலைவரின் காரியாலயத்திலும்  அமைச்சர்கள் உட்பட  பிரதி அமைச்சர்களின் கொடுப்பனவுகள் அதனோடு தொடர்புடைய அமைச்சிலும் வழங்கப்படும்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான டிசம்பர் மாத கொடுப்பனவுகள் மாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. திடீரென ஏற்பட்ட அரசியல் மாற்றம் காரணமாக பிரதமர், எதிர்கட்சி தலைவர் மற்றும் அமைச்சர்கள் தொடர்பாக பலவிதமான வாத விவாதங்கள் நடைபெற்றமையே இதற்கு காரணம். 

இந்நிலையில், அதன் பின்னர்  திருத்தங்கள் காரணமாக ஜனவரி மாதத்தில் கொடுப்பனவுகளை  மீண்டும் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செய்திகள் தெரிவித்துள்ளன.

அதன்படி  டிசம்பர் மாத கொடுப்பனவுகள் ஜனவரி மாத கொடுப்பனவுடன் சேர்ந்து கொடுப்பதற்கு அல்லது அதிபடியாக கொடுத்திருந்தால் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49