ஆரம்பப் போட்டியிலேயே நியூஸிலாந்து அதிரடி ; இலங்கைக்கு இமாலய வெற்றியிலக்கு

Published By: Vishnu

03 Jan, 2019 | 10:36 AM
image

இலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 371 ஓட்டங்களை குவித்தது.

நியூஸிலாந்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது நியூஸிலாந்துடன் இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் ஒரு இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதில் முதலாவதாக நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரை நியூஸிலாந்து அணி கைப்பற்றியுள்ள நிலையில், இவ் விரு அணிகளுக்கிடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று காலை மௌனன்குயினில் ஆரம்பானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் நிறைவில் சிறப்பானதொரு ஆட்டத்தை 7 விக்கெட்டுக்களை இழந்து 371 ஓட்டங்களை குவித்தது.

இதன் மூலம் இலங்கை அணிக்கு வெற்றியிலக்காக 372 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

நியூஸிலாந்து அணி சார்பாக மார்ட்டின் குப்டில் 139 பந்துகளை எதிர்கொண்டு 11 நான்கு ஓட்டங்கள், 5 ஆறு ஓட்டங்கள் அடங்களாக 138 ஓட்டங்களையும், அணித் தலைவர் வில்லியம்சன் 74 பந்துகளை எதிர்கொண்டு 6 நான்கு ஓட்டங்கள் அடங்களாக 76 ஓட்டங்களையும், ரோஷ் டெய்லர் 37 பந்துகளை எதிர்கொண்டு 2 ஆறு ஓட்டங்கள், 6 நான்கு ஓட்டங்கள் அடங்களாக 54 ஓட்டங்களையும்,  ஜேம்ஸ் நீஷம் 13 பந்துகளை எதிர்கொண்டு 6 ஆறு ஓட்டங்கள் அடங்களாக 47 ஓட்ங்களையும்  அதிகபடியாக பெற்றனர்.

இதேவேளை 7 விக்கெட்டுக்காக களமிறங்கிய ஜேம்ஸ் நீஷம் 49 ஆவது ஓவருக்காக திஸர பெரேரா பந்துப் பறிமாற்றம் மேற்கொள்ள அந்த ஓவரில் 5 ஆறு ஓட்டங்களை விளாசித் தள்ளியுதுடன் 34 ஓட்டங்களை குவித்து அசத்தினார்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் திஸர பெரேரா, மலிங்க மற்றும் நுவான் பிரதீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இவ் விரு அணிகளும் இதுவரையில் 95 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன. அதில் நியூஸிலாந்து அணி 45 போட்டிகளிலும், இலங்கை அணி 41 போட்டிகளிலும், ஒரு போட்டி வெற்றி தோல்வியின்றியும், 8 போட்டிகளில் எதுவித முடிவுகளின்றியும் நிறைவு பெற்றுள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07
news-image

வுல்வாட் அபார சதம் : இலங்கையை...

2024-04-14 09:35:43
news-image

கடைசி 2 ஓவர்களில் ஹெட்மயரின் அதிரடியால்...

2024-04-13 23:48:46