களுத்துறை துப்பாக்கிச் சூடு ; பிரதான சந்தேக நபர் துப்பாக்கியுடன் கைது

Published By: Vishnu

03 Jan, 2019 | 08:27 AM
image

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  - தொட்டுபல சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் பயாகல பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த முதலாம்  திகதி இரவு 10.35 மணியளவில்  காரில்  பயணித்த இனம் தெரியாத நபர்கள் இருவரால் மேற்படி துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் துப்பாக்கிச் சூட்டுக்கிலக்கான நபர் படுகாயமடைந்த நிலையில் களுத்துறை -  நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு   சிகிச்சை பெற்று வந்தார்.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் எழுந்த பிரச்சினைக்கு அமைவாகவே இத் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

இந் நிலையிலேயே துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய நபர் இன்று அதிகாலை துப்பாக்கியுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

அத்துடன் இவ்வாறு கைதுசெய்யப்பட்ட 35 வயதுடைய சந்தேக நபரை இன்றைய தினம் களுத்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04