ஜனவரி 5 ஆம் திகதியை தேசிய தினமாக பிரகடனப்படுத்த நடவடிக்கை

Published By: Vishnu

02 Jan, 2019 | 03:50 PM
image

(எம்.மனோசித்ரா)

பௌத்த மத புனித நூலான திரிபீடகத்தை தேசிய மரபுரிமைச் சின்னமாக பிரகடனப்படுத்துவதற்கான தேசிய தினம் எதிர்வரும் 5 ஆம் திகதி சனிக்கிழமை மாத்தளை அலுவிகாரையில் இடம்பெறவுள்ளதாக புத்த சாசனம் மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்தார். 

ஜனாதிபதி செயளகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், 

கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் பௌத்த மத புனித நூலான திரிபீடகத்தை தேசிய மரபுரிமைச் சின்னமாக பிரகடனப்படுத்துவதற்கான அமைச்சரவை பத்திரம் அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டது. அதற்கான அங்கீகாரமும் கிடைக்கப்பெற்றுள்ளது. அத்தோடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இந்த விடயம் தொடர்பாக முன்னதாகவே அறிவித்திருந்தார். அதன்படி 5 திகதி இவ் உற்சவம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த உற்சவ தினத்தன்று நாடளாவிய ரீதியிலுள்ள சலக அரச நிறுவனங்கள் மற்றும் பௌத்த விகாரைகளில் பௌத்த கொடி ஏற்றப்பட வேண்டும். அத்தோடு அனைத்து விகாரைகளிலும் பூஜை வழிபாடுகளும் இடம்பெறும். மாத்தளை அலுவிகாரையில் இடம்பெறவுள்ள இந்த உட்சவத்தில் கலந்துகொள்வதற்கு சுமார் 2000 பௌத்த மதகுருமார்கள் மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38