தந்தையின் மரணவீட்டிற்கு செல்லாது அணிக்காக விளையாடிய ஆப்கான் வீரர்

Published By: Vishnu

02 Jan, 2019 | 12:24 PM
image

தனது தந்தை இறந்த செய்தி அறிந்தும் சொந்த நாட்டுக்கு செல்லாமல் தனது அணிக்காக விளையாடிய ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கானை ரசிகர்களும், சக வீரர்களும் பாராட்டி வருகின்றனர்.

ரஷித் கான் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுவரும் பிக்பாஷ் இருபதுக்கு 20 போட்டிகளில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

இந் நிலையில் கடந்த 30 ஆம் தகதி அவரின் தந்தை காலமாகி விட்டதாக அவருக்கு தகவல் வழங்கப்பட்டது. எனினும் அவர் தனது சொந்த நாட்டுக்குச் செல்லாமல், அவுஸ்திரேலியாவில் தனது அணிக்காக விளையாடி தந்தைக்கு மரியாதை செலுத்தியுள்ளார். 

அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் சிட்னி தண்டர்ஸ் அணிகளுக்கிடையே கடந்த 31 ஆம் திகதி இடம்பெற்ற போட்டியின் போது, 9 ஆவது ஓவருக்காக ரஷித் கான் பந்துப் பரிமாற்றம் செய்ய வந்தபோது, மைதானத்தில் உள்ள அனைத்து ரசிகர்களும் எழுந்து நின்று கைதாட்டி அவரை வரவேற்றனர்.

இப் போட்டியில் 4 ஓவர்கள் பந்துப் பரிமாற்றம் செய்த ரஷித் கான் 34 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். தனது தந்தையின் இறப்பையும் பொருட்படுதத்தாமல் அணிக்காக விளையாடிய ரஷித் கானை சக வீரர்கள் கட்டியணைத்து பாராட்டு தெரிவித்தனர். 

இப் போட்டியில் ரஷித் கான் சார்ந்திருந்த அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 20 ஓட்டங்களினால் வெற்றி பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09