12 அமைச்­சர்கள் மற்றும் எம்.பி.க்களின் பெயர்­களில் மது­பா­ன­சா­லை­க­ளுக்­கான அனு­மதிப் பத்­தி­ரங்கள் உள்­ள­தா­கவும் அவ்­வாறு அனு­ம­திப்பத்­திரம் பெற்­றுள்­ள­வர்­களின் பெயர் விப­ரங்­களை அடுத்த அமைச்­ச­ரவைக்கூட்­டத்தில் வெளி­யி­டு­மாறும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­வுக்கு பணிப்­புரை விடுத்­துள்ளார். 

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் நேற்று முன்­தினம் அமைச்­ச­ரவைக் கூட்டம் இடம்­பெற்­றது. இந்தக் கூட்­டத்­தின்­போது பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மற்றும் அமைச்­சர்­க­ளாக உள்­ள­வர்­களின் பெயர்­களில் 12 மது­பா­ன­சாலை அனு­மதிப் பத்­தி­ரங்கள் உள்ள விடயம் தொடர்பில் பிரஸ்­தா­பிக்­க­கப்­பட்­டுள்­ளது. இத­னை­விட பெரு­ம­ள­வான மது­பா­ன­சா­லை­க­ளுக்­கான அனுதிப் பத்­தி­ரங்கள் அர­சி­யல்­வா­தி­க­ளது மனைவி, சகோ­த­ரர்கள் உட்­பட உற­வி­னர்­களின் பெயர்­களில் உள்­ளமை குறித்தும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

எம்.பி.க்கள் மற்றும் அமைச்­சர்­களின் பெயர்­க­ளி­லுள்ள மது­பா­ன­சாலை அனு­மதிப் பத்­தி­ரங்­களின் விப­ரங்­க­ளையும் அவர்­க­ளது பெயர்­க­ளையும் அடுத்த அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் வெளிப்­ப­டுத்­த­வேண்­டு­மென்று ஜனா­தி­பதி பணிப்­புரை விடுத்­தி­ருக்­கின்றார்.

45 மது­பா­ன­சா­லை­க­ளுக்­கான அன­ம­திப்­பத்­தி­ரங்கள் நேர­டி­யா­கவே அர­சி­யல்­வா­தி­களின் பெயர்­களில் பெற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. இவர்­களில் 12 பேர் அமைச்­சர்­க­ளா­கவும் எம்.பி.க்களா­கவும் தற்­போது உள்­ளனர். இந்த அனு­ம­திப்­பத்­தி­ரங்­களில் 13 பத்­தி­ரங்கள் குரு­ணாகல் மாவட்ட அர­சி­யல்­வா­தி­க­ளினால் பெற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. 1994ஆம் ஆண்டு முதல் இது­வ­ரையில் ஆட்சி புரிந்த அர­சாங்­கங்கள் 1098 மது­பா­ன­சாலை அனு­மதிப் பத்­தி­ரங்­களை வழங்­கி­யுள்­ளன. இந்த அனுமதிப்பத்திரங்கள் அரசியல்வாதிகளின் சிபார்சுகளினடிப்படையிலேயே வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையிலேயே மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் வைத்திருக்கும் அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்களின் பெயர்களை வெளிப்படுத்துமாறு தற்போது பணிக்கப்பட்டுள்ளது.