நிதி அமைச்சின் கீழ் ஊடகத்துறை சாத்தியமற்றது - பந்துல குணவர்தன 

Published By: Vishnu

01 Jan, 2019 | 05:53 PM
image

(எம்.மனோசித்ரா)

ஜனநாயக நாடொன்றில் நிதி மற்றும் ஊடகத்துறை என்பன ஒரே அமைச்சின் கீழ் செயற்படுவது சாத்தியமற்றதாகும். நாட்டில் பொருளாதார ரீதியாக பாரிய நெருக்கடிகள் காணப்படுகின்ற போதிலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஊடகங்களை கறுப்பு ஊடகம் என விமர்சித்துக் கொண்டிருக்கின்றார். அமைச்சர் மங்கள சமரவீரவிடம் ஊடகத்துறை காணப்படுவது ஊடகங்களுக்கு அச்சுறுத்தலாக அமையும். எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார். 

கொழும்பில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகசந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில், 

கூட்டு எதிர்கட்சியின் சார்பில் நிதி அமைச்சர் மங்கள சமவீரவுக்கு எதிராக நான் வழக்கு தொடரவுள்ளேன். காரணம் ஜனநாயக நாட்டில் நிதி மற்றும் ஊடகத்துறை ஒரு அமைச்சின் கீழ் செயற்பட முடியாது. எனவே ஊடகங்களை கறுப்பு ஊடகம் என விமர்சிப்பதையும், அவற்றை கட்டுப்படுத்துவதையும் இந்த வருடத்தில் மங்கள சமரவீர கைவிட வேண்டும். 

அமைச்சரவை மற்றும் அது தொடர்பான வர்த்தமானி வெளியிடும் அதிகாரம் ஜனாதிபதியிடம் காணப்படுகின்றது. எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02