தலாதா மாளிகைக்குச் சென்று பிறக்கவிருக்கும் புத்தாண்டுக்கான ஆசீர்வாதங்களை பெற்றார் ஜனாதிபதி

Published By: Vishnu

31 Dec, 2018 | 06:37 PM
image

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று முற்பகல் வரலாற்று முக்கியத்துவமிக்க கண்டி தலாதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு, பிறக்கவிருக்கும் புத்தாண்டுக்கான ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து மல்வத்தை விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி அவர்கள், மல்வத்தை மகா நாயக்க தேரர் சங்கைக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல மகா நாயக்க தேரரை சந்தித்து அவரது சுகதுக்கங்களை கேட்டறிந்தார்.

தேரர் அவர்கள் பிரித் பாராயணம் செய்து பிறக்கும் புத்தாண்டுக்காக ஜனாதிபதிக்கு ஆசீர்வாதம் அளித்தார்.

அஸ்கிரி மகாநாயக்க தேரர் வெளிநாடு சென்றிருப்பதால் அஸ்கிரி கெடிகே மகா விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி அவர்கள், அஸ்கிரி அனுநாயக்க தேரர் சங்கைக்குரிய வெண்டருவே உபாலி அனுநாயக்க தேரரை சந்தித்து உரையாடினார். தேரர் அவர்களும் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதியை ஆசீர்வதித்தார்.

அஸ்கிரிய கெடிகே விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் அன்னதான மண்டபம் மற்றும் தொல்பொருள் நிலையத்தின் நிர்மாணப் பணிகளையும் ஜனாதிபதி பார்வையிட்டார். அங்கு வருகை தந்திருந்த ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த

ஜனாதிபதி அவர்கள், 2019 ஆம் ஆண்டை ஊழல் அற்ற ஆண்டாக பிரகடனப்படுத்த உள்ளதாகத் தெரிவித்தார்.

தனது மனசாட்சிக்கு ஏற்ப நேர்மையாக செயற்பட்டு நாட்டை கட்டியெழுப்பும் சவாலை வெற்றிகொள்வதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நோய்வாய்ப்பட்டு கண்டி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் ராமாஞ்ய மகா நிக்காயவின் மகா நாயக்க தேரர் சங்கைக்குரிய நாபான பேமசிறி நாயக்க தேரரை சந்தித்து  ஜனாதிபதி அவரது சுகதுக்கங்களை கேட்டறிந்ததுடன், அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்தார்.

மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க ஆகியோரும் ஜனாதிபதி அவர்களுடன் இவ்விஜயத்தில் இணைந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08