ஆபாச இறுவெட்டுக்களை (DVDS) விற்பனை செய்த ஒருவர் புறக்கோட்டையில் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். 

கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதன்போது சந்தேகநபர் வசம் இருந்து 1202 இறுவெட்டுக்கள் மற்றும் கணனிகளும் கைப்பற்றப்பட்டுள்ளது. 

அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, குறித்த சம்பவம்தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.