இலங்கை அணியின் வீரர் அஞ்சலோ மெத்தியூஸிற்கு 4 வராங்களுக்கு போட்டிகளில் பங்கேற்க முடியாதென இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

நியூசிலாந்து அணியுடன் கிறைஸ்ட்சேர்சில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 2 ஆவது இன்னிங்ஸில் ஓட்டங்களைப்பெறும் போது காயமடைந்த அஞ்சலோ மெத்தியூஸ் ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

இந்நிலையில், அஞ்சலோ மெத்தியூஸின் இடது தொடையில் ஏற்பட்ட உபாதையால் அவர் 4 வாரங்களுக்கு போட்டிகளில் கலந்துகொள்ள முடியாதென இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.