இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம், வடக்கு கொல்கத்தாவில் புதிதாக கட்டுப்பட்டு வந்த பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்தனர். 

கொல்கத்தாவின் கணேஷ் டாக்கீஸ் பகுதியில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் கட்டுமானப்பணி நடைபெற்று வந்த பாலமானது இன்று திடீரென இடிந்து விழுந்தது. 

இச்சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

பாலம் இடிந்து விழுந்தமை தொடர்பாக தகவல் கிடைக்கப்பெற்றதும் பொலிஸார் மற்றும் மீட்புப்  குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இடிபாடுகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.