கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை ஜனவரியில் தொடங்கும் - தமிழிசை

Published By: Daya

29 Dec, 2018 | 02:09 PM
image

பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்த பேச்சு வார்த்தை அடுத்த மாதமான ஜனவரியில் தொடங்கும் என்று தமிழக பா. ஜ. க தலைவரான தமிழிசை தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக மேலும் தெரிவித்ததாவது,

“ஜல்லிக்கட்டிற்கு முன்கூட்டியே அரசாணை வெளியிட்டதை வரவேற்கிறோம். ஜல்லிகட்டு போட்டியின் போது  பாதுகாப்பையும் அரசு உறுதி செய்யவேண்டும். தி.மு.க. தலைவர் மு. க. ஸடாலின் மீண்டும் மீண்டும் மத்திய அரசை குறை கூறுகிறார்.

மத்திய அரசின் திட்டங்களை மறைக்கிறார். பிரதமர் மோடி அடிக்கடி வெளிநாடு செல்வதாக குற்றம் சாட்டுகிறார். தற்போது வெளிநாட்டிற்கு இணையாக பாம்பன் பாலம் மாற்றப்படுகிறது.

முத்தலாக் சட்டம் குறித்து அ.தி.மு.க.வின் பாராளுமன்ற உறுப்பினர் அனவர்ராஜா கூறிய கருத்து முற்றிலும் கண்டிக்கத்தக்கது. சிறுபான்மையின பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் தான் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி கூட்டணி நிச்சயமாக இருக்கும் அதில் எந்தெந்த கட்சிகள் இடம்பெறும் என்பதை இப்போதே சொல்வது சரியாக இருக்காது. அடுத்த மாதமான ஜனவரி மாதத்தில் கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தையை தொடங்குவோம்.

அதனால் நிச்சயம் கூட்டணி இருக்கும் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியை விட சதவீதத்திலும், சாதனைகளிலும் மக்களை அணுகுவதிலும் எங்கள் கூட்டணி ஒரு பலமான கூட்டணியாக இருக்கும் என்பதை உறுதியாக சொல்ல முடியும்” என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08