பிலிப்பைன்ஸில் 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

Published By: Daya

29 Dec, 2018 | 11:53 AM
image

பிலிப்பைன்ஸ் மிண்டானோ தீவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதியில் உள்ள கட்டடங்கள்  குலுங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிலிப்பைன்ஸ் தெற்கு பகுதியில் உள்ள மிண்டானோ தீவில் இன்று காலை  நிலநடுக்கம் ஏற்பட்டது.  ரிக்டர் அளவு கோலில் 7.2 அலகாக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 அதன்பின்னர் 6.9 ரிக்டர் என தெரிவிக்கப்பட்டது. 

 ஜெனரல் சான்டோஸ் நகரின் கிழக்கில் 193 கி.மீ. தொலைவில் பூமிக்கடியில் 59 கி.மீ. ஆழத்தில் குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

குறித்த காரணத்தால் அப்பகுதியிலுள்ள கட்டடங்கள் கடுமையாக குலுங்கின. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் தொடர்பான தகவல் எதுவும் வெளியாகவில்லை. 

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அதனை ஒட்டியுள்ள பசிபிக் கடற்பகுதியில் சுனாமி அலைகள் உருவாக வாய்ப்பு உள்ளதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. 

குறிப்பாக நிலநடுக்க பகுதியில் இருந்து 300 கி.மீ .தொலைவிற்கு பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேஷிய கடற்பகுதியில் சுனாமி உருவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால், அதனை ஒட்டியுள்ள அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தில் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08