அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈராக்கிற்கான தனது விஜயத்தின் போது அங்கு இரகசியமாக செயற்படும் அமெரிக்க நேவிசீல் படைப்பிரிவினர் குறித்த தகவல்களை தற்செயலாக அம்பலப்படுத்தியுள்ளார் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன
ஈராக்கிற்கான விஜயத்தின் பின்னர் நேவி சீலை சேர்ந்த ஒருவருடன் தான் காணப்படும் புகைப்படத்தை டிரம்ப் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
அந்த டுவிட்டர் செய்தியில் டிரம்;ப் நேவீ சில் வீரரின் பெயர் அமெரிக்காவில் அவர் எங்கு வாழ்கின்றார் அவரது முகாம் எங்குள்ளது போன்ற விபரங்களை தெரிவித்துள்ளார்
இதன் மூலம் வழமையாக இரகசியமாக பாதுகாக்கப்படும் விடயங்களை அவர் அம்பலப்படுத்தியுள்ளார்.
டிரம்ப் அமெரி;;க்காவின் சீல் டீம் பைவ் வீரர்களுடன் காணப்படுகின்றார் அவர்களுடைய முகங்கள் மறைக்கப்படவில்லை என அமெரிக்க ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
நேவி சீல் குறித்த விபரங்கள் மிகவும் இரகசியமானவை என தெரிவித்துள்ள பாதுகாப்பு துறையினர் அவர்களின் முகங்களை மறைத்த பின்னரே புகைப்படங்களை வெளியிடுவது வழமை என தெரிவித்துள்ளனர்
மோதல்கள் இடம்பெறும் பகுதிகளில் நடவடிக்கைகளில் ஈடுபடும் விசேட படையினரின் பாதுகாப்பே முக்கியம் என குறிப்பிட்டுள்ள முன்னாள் அதிகாரியொருவர் உண்மையான பெயர் உட்பட அனைத்து விபரங்களும் இரகசியமாக பேணப்படும் என தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM