போதைப்பொருள் அற்ற நாடாக இலங்கையை மாற்றப்போவதாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்த தெரிவிப்பு 

Published By: Daya

28 Dec, 2018 | 04:05 PM
image

(இரோஷா வேலு) 

இலங்கையானது மெல்ல மெல்ல போதைப்பொருள் வர்த்தக கேந்திர நிலையமாக மாற்றம் கண்டு வருவதை கவனத்தில் கொண்டு போதைப்பொருள் தடுப்பு பணிகளில் கடுமையாக கடைப்பிடிக்குமாறு அனைத்து பொலிஸாருக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார். 

பொலிஸாரின் பதவி உயர்வுகள் தொடர்பில் தாம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தமை தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

போதைப்பொருள் வர்த்தகர்களின் கேந்திர நிலையமாக மாறி வரும் இலங்கையை அந்த பாதையிலிருந்து மீட்டெடுக்கும் பணிகளே தற்போது இடம்பெற்று வருகின்றது. இவ்வருடம் அதிகளவான போதைப்பொருள் கடத்தல் முயற்சிகள் பல முறியடிக்கப்பட்டுள்ளன. 

போதைப்பொருளற்ற நாடாக இலங்கையை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேலும் அதிகரிக்குமாறு ஜனாதிபதியும் அண்மையில் அறிக்கையொன்றை விடுத்திருந்தார். அதன்போல், போதைப்பொருள் வர்த்தகத்தை இல்லாதொழித்து எமது நாட்டு இளைஞர்களை பாதுகாக்குமாறு  மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையும் பொலிஸாரின் கிறிஸ்மஸ் விழாவின் போது கோரிக்கை விடுத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43