பிரச்சினையை தீர்க்கும் முயற்சியில் இந்தியாவும் பாகிஸ்தானும் தோல்வியை தழுவியுள்ளன : பாகிஸ்தான்

Published By: Digital Desk 7

28 Dec, 2018 | 11:42 AM
image

இந்தியாவுடனான பிரச்சினைகளை தீர்ப்பதில் எந்த வித முன்னேற்றமும் இல்லையென பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் முகமது பைசல் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே முகமது பைசல் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட முகமது பைசல்,

“காஷ்மீர் விவகாரத்திற்கே நாங்கள் முக்கியத்துவம் அளித்து வருகிறோம். எனினும் இந்தியாவுடனான பிரச்சினைகளை தீர்ப்பதில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

கர்தார்பூர் வழித்தடத்தை ஏற்படுத்தியது மாத்திரமே இரு நாடுகளுக்கிடையில் சாதகமான விளைவை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவுடனான தொடர்பை மேம்படுத்த கடந்த செப்டம்பர் மாதம் அந் நாட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார். ஆனாலும் அதற்கு இந்தியா எந்தவித பதிலும் தெரிவிக்கவில்லை.

இதனால் பிரச்சினைகளை தீர்க்கும் முயற்சியில் இரு நாடுகளும் தோல்வியைத் தழுவியுள்ளன என்றே கூறலாம்.

இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு மறுத்து வந்த போதிலும் கர்தார்பூர் வழித்தடத்தை அமைப்பதற்கான பணிகளை பாகிஸ்தான் முன்னெடுத்து வருகிறது” என தெரிவித்தார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53