உலகளவில் கடந்த ஆண்டு கலப்படம் செய்யப்பட்ட மற்றும் நஞ்சான பல்லாயிரம் டோன் உணவுப் பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக இன்டர்போல் அமைப்பு தெரிவித்துள்ளது.

சூடானில் சர்க்கரையில் உரம் கலப்படம், இந்தோனேஷியாவில் பார்மால்டிஹைட்இரசாயனத்தில்பாதுகாக்கப்பட்ட கோழி இறைச்சி போன்றவற்றை பொலிஸார்கண்டுபிடித்து கைப்பற்றியுள்ளதாக இன்டர்போல் தெரிவித்துள்ளது.

இதேபோல் பளபளப்பாகக் காட்டும் நோக்கில் ஓலிவ் காய்களில் தாமிர சல்பேட் பூசப்பட்டிருந்ததை இத்தாலிய பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

ஹங்கேரி, ருமேனியா, லித்துவேனியா ஆகிய நாடுகளில் போலி சொக்லேட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவை மேற்கு ஆப்ரிக்க நாடுகளிலுள்ள சிறார்களை இலக்குவைத்து ஏற்றுமதி செய்யப்படவிருந்தன என்று இன்டர்போல் அமைப்பின் அறிக்கை கூறுகிறது.