யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் வீடொன்றிலிருந்து மீட்கப்பட்ட  கிளை மோர் குண்டுகள் மற்றும் ஆயுதங்கள் தொடர்பிலான விசாரணை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

பதில் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம்.விக்ரமசிங்கவினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார். 

குறித்த வீட்டிலிருந்து ஒரு தற்கொலை அங்கி, 4 கிளைமோர் குண்டுகள், 2 கிளைமோர் பற்றரிகள், 12 கிலோ  சி -4 ரக வெடி மருந்து, 9 மி.மீ. கைதுப்பாக்கி ரவை-100 மற்றும் 5 சிம் அட்டைகள் என்பன நேற்று மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.