முதல் இன்னிங்ஸில் 443 ஓட்டங்களை குவித்தது இந்தியா

Published By: Vishnu

27 Dec, 2018 | 12:56 PM
image

இந்தியவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் அவுஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 08 ஓட்டங்களை‍ பெற்றுள்ளது.

மெல்போர்னில் நேற்றைய தினம் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி நேற்றைய முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 215 ஓட்டங்களை குவித்திருந்தது.

ஆடுகளத்தில் புஜரா 68 ஓட்டத்துடனும், விராட் கோலி 47 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். இந் நிலையில் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று ஆரம்பிக்க இந்திய 169.4 ஓவர்களை எதிர்கொண்டு 7 விக்கெட்டுக்களை இழந்து 443 ஓட்டங்களை பெற்ற வேளை ஆட்டத்தை நிறுத்தியது. 

இந்திய அணி சார்பாக புஜாரா 106 ஓட்டத்தையும், அணித் தலைவர் விராட் கோலி 82 ஓட்டத்தையும், மயக் அகர்வால் 76 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றதுடன், ரோகித் சர்மா 63 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுக்களையும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுக்களையும், ஜோஷ் ஹாஸ்லேவுட் மற்றும் நெதன் லியோன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 8 ஓட்டங்களை பெற்றுள்ளது. ஆடுகளத்தில் மார்கஸ் ஹாரிஸ் 5 ஓட்டத்துடனும், ஆரோன் பிஞ்ச் 3 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.

நாளை போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டமாகும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகலடைந்த மும்பை...

2024-04-19 02:08:17
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49